ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடியதால் வாய்ப்பளிக்க மறுத்த இசைஞானி... இளையராஜா மீது பாடகி மின்மினி பரபரப்பு புகார்
இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையில் பாடிய பின்னர் இளையராஜா தனக்கு வாய்ப்பு அளிக்க மறுத்ததாக பாடகி மின்மினி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரை உலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆன ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். ரோஜா திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதற்கு படத்தின் பாடல்களும் முக்கிய காரணமாக இருந்தன. அதில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகின. குறிப்பாக அப்படத்தில் இடம்பெற்ற சின்ன சின்ன ஆசை என்கிற பாடல் பட்டி தொட்டி எங்கும் பரவி வேற லெவலில் ஹிட் ஆகியது.
சின்ன சின்ன ஆசை பாடலை எழுதியதற்காக கவிஞர் வைரமுத்துவுக்கு தேசிய விருதும் கிடைத்தது. அந்தப் பாடல் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதற்கு அதை தன் தனித்துவமான குரலில் பாடிய பாடகி மின்மினியும் முக்கிய காரணம். அப்படி ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் பாடலை பாடிய மின்மினி அதன் பின் ஆளே அட்ரஸ் இல்லாமல் காணாமல் போனார்.
இதையும் படியுங்கள்... கோடி கோடியாய் கொட்டும் சம்பளம்... வெளிநாட்டில் சொத்துகளை வாங்கி குவிக்கும் பிரபாஸ் - இப்போ எந்த நாட்ல தெரியுமா
பாடகி மின்மினிக்கு சின்ன சின்ன ஆசை பாடல்தான் மிகப்பெரிய பெயரையும் புகழையும் பெற்று தந்தது. ஆனால் அவரை அறிமுகப்படுத்தியது இளையராஜா. இசைஞானி இசையில் வெளிவந்த மீரா திரைப்படத்தின் மூலம் பாடகி மின்மினி பின்னணி பாடகியாக அறிமுகமானார். 1993ம் ஆண்டு வரை பல்வேறு படங்களில் பாடி வந்த இவர் அதன்பின் ஏற்பட்ட நோய் பாதிப்பு காரணமாக பாடும் திறனை இழந்தார்.
இதையடுத்து சினிமாவை விட்டே விலகிய மின்மினி, பல்வேறு விதமான சிகிச்சைகளை எடுத்துக்கொண்ட பின்னர் மீண்டும் பாடும் திறனை பெற்று ஒருசில படங்களில் பாடி வருகிறார். இந்நிலையில் மலையாளத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாடகி மின்மினி, சின்ன சின்ன ஆசை பாடல் தனக்கு புகழை பெற்றுத்தந்தது. அதற்கு முன்னர் வரை எனக்கு ஒவ்வொரு படத்திலும் பாட வாய்ப்பு வழங்கி வந்த இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடிய பின்னர் தனக்கு வாய்ப்பளிக்கவில்லை என பகீர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
இதையும் படியுங்கள்... ஒரே எழுத்தில் ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக டைட்டில் வைத்து வெளியான தமிழ் படங்கள்... அட இதுல அஜித் படமும் இருக்கா!