கோடி கோடியாய் கொட்டும் சம்பளம்... வெளிநாட்டில் சொத்துகளை வாங்கி குவிக்கும் பிரபாஸ் - இப்போ எந்த நாட்ல தெரியுமா
பான் இந்தியா நடிகராக வலம் வரும் பிரபாஸ், வெளிநாட்டில் நிறைய சொத்துக்களை வாங்கி குவித்து வருவதாக டோலிவுட் வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.
Prabhas
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்த பிரபாஸ், பாகுபலி படத்தின் அதிரிபுதிரியான வெற்றிக்கு பின்னர் பான் இந்தியா நடிகராக உயர்ந்துவிட்டார். இதனால் இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பாகுபலி படத்திற்கு பின்னர் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த சாஹோ திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இப்படத்தில் நடிகர் அருண் விஜய் வில்லனாக நடித்திருந்தார்.
Prabhas
சாஹோ படத்தின் தோல்விக்கு பின்னர் பிரபாஸ் நடித்த படம் தான் ராதே ஷ்யாம். ராதா கிருஷ்ணா என்பவர் இயக்கியிருந்த இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். கடந்தாண்டு ரிலீஸ் ஆன இப்படம் பாக்ஸ் ஆபிஸில் மரண அடி வாங்கியது. இது சுமார் ரூ.100 கோடி அளவுக்கு நஷ்டத்தை சந்தித்தது. இதன்பின்னர் எப்படியாவது ஹிட் கொடுத்துவிட வேண்டும் என்கிற கனவோடு, இராமாயண கதையை கையில் எடுத்தார் பிரபாஸ்.
Prabhas
ஆதிபுருஷ் என்கிற பெயரில் சுமார் ரூ.600 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படத்தை ஓம் ராவத் இயக்கி இருந்தார். இப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. வெளியானது முதல் நெகடிவ் விமர்சனங்களை மட்டுமே பெற்று வரும் இப்படம் ஒரு வாரத்தில் ரூ.400 கோடி வசூலித்ததாக படக்குழு அறிவித்தது. இருப்பினும் பட்ஜெட் தொகையை பெறவே அப்படத்திற்கு இன்னும் ரூ.200 கோடி தேவைப்படுவதால், இதுவும் பிளாப் லிஸ்ட்டில் தான் இணைந்துள்ளது.
இதையும் படியுங்கள்... குழந்தை பெற்ற பிறகும் கிளாமர் உடையில் தெறிக்கவிடும் பிக்பாஸ் சுஜா வருணி - வைரலாகும் செம்ம ஹாட் போட்டோஸ் இதோ
Prabhas
இப்படி தொடர்ந்து பிளாப் படங்களை கொடுத்தாலும் நடிகர் பிரபாஸுக்கு ஒரு படத்துக்கு ரூ.100 முதல் ரூ.150 கோடி வரை சம்பளமாக வழங்கப்படுகிறதாம். இந்த தொகையை எல்லாம் அவர் வெளிநாட்டில் தான் முதலீடு செய்கிறாராம். அந்த வகையில் தற்போது இத்தாலி நாட்டில் பல கோடி மதிப்புள்ள ஒரு ஆடம்பர பங்களா ஒன்றை சொந்தமாக வாங்கி உள்ளாராம் பிரபாஸ். இந்த பங்களாவை தற்போது ரூ.40 லட்சத்திற்கு வாடகைக்கு விட்டுள்ளாராம்.
Prabhas
இதுதவிர ஓய்வெடுக்க வேண்டும் என தோன்றினால் இத்தாலிக்கு சென்று அங்கு தங்கி பொழுதை கழிக்கவும் பிரபாஸ் திட்டமிட்டுள்ளாராம். அவருக்கு ஐதராபாத்திலும் ஒரு சொந்த வீடு உள்ளது. அந்த வீட்டின் மதிப்பு ரூ.90 கோடி ஆகும். இதுதவிர சொகுசு கார்களும் வைத்துள்ளார். படங்கள் பிளாப் ஆனாலும், பிரபாஸின் காட்டில் பண மழை பொழிந்து வருவது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
இதையும் படியுங்கள்... ஒரே எழுத்தில் ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக டைட்டில் வைத்து வெளியான தமிழ் படங்கள்... அட இதுல அஜித் படமும் இருக்கா!