Premji Amaren : பிரபல நடிகர் மற்றும் இசையமைப்பாளர் பிரேம்ஜி அமரனுக்கு சில தினங்களுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்தது. திரைத்துறையினர் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

உலக சினிமாவை பொறுத்தவரை மிகப்பெரிய இசை கலைஞரான இசைஞானி இளையராஜா அவர்களுடைய தம்பி கங்கை அமரனின் இளைய மகன்தான் பிரேம்ஜி அமரன். சிறு குழந்தையாக இருந்த பொழுது இசையின் மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமாக, வெளிநாடுகளுக்கு சென்று இசை பயின்றவர் அவர் என்பது பலரும் அறிந்ததே. 

கடந்த 2006ம் ஆண்டு தமிழில் வெளியான "துணிச்சல்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் இவர் இசையமைப்பாளராக களம் இறங்கினார். தொடர்ச்சியாக தமிழில் பல படங்களுக்கு இவர் இசையமைத்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இன்று தமிழ் சினிமாவில் ரசிகர்கள் விரும்பி கேட்கும் பல பாடல்களை பாடியது பிரேம்ஜி தான். 

Rajini : இலங்கை பெருந்தோட்ட சமூகம்.. வரலாற்று முக்கியம் வாய்ந்த நிகழ்வு - ரஜினிகாந்திற்கு கிடைத்த அங்கீகாரம்!

பாடகராகவும், இசையமைப்பாளராகவும் மற்றும் நடிகராகவும் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் பயணித்து வரும் பிரேம்ஜி, கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி இந்து என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களது திருமணம் திருத்தணி முருகன் கோவிலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அவருடைய சினிமா நண்பர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். 

View post on Instagram

இந்நிலையில் அவருடைய திருமணத்திற்கு பின்னதான நிகழ்வில் இசை கச்சேரி ஒன்று நடத்தப்பட்டது. அந்த இசை கச்சேரியில் பங்கேற்று பாடி அங்கு வந்திருந்த மக்களை அசரடித்துள்ளார் பிரேம்ஜி என்று தான் கூற வேண்டும். ஆனால் தனது திருமண மேடையில் "மங்காத்தா" படத்தில் வரும் "மச்சி ஓப்பன் தி பாட்டில்" என்கின்ற பாடலை அட்டகாசமாக பாடி, அங்கு இருந்தவர்களை அதிர வைத்தார். அட திருமண நிகழ்வில் பாடவேண்டிய பாடலா இது என்று நெட்டிசன்கள் அவரை செல்லமாக கலாய்த்து வருகின்றனர்.

Amala Paul Baby: வாவ்.. நடிகை அமலா பாலுக்கு குழந்தை பிறந்தாச்சு! வித்தியாசமான பெயரோடு... வெளியிட்ட போட்டோஸ்!