Rajini : இலங்கை பெருந்தோட்ட சமூகம்.. வரலாற்று முக்கியம் வாய்ந்த நிகழ்வு - ரஜினிகாந்திற்கு கிடைத்த அங்கீகாரம்!
Rajinikanth : கடந்த 200 ஆண்டுகளாக இலங்கையில் தோட்ட தொழிலார்களாக பணியாற்றி வரும் தமிழினம் குறித்து பல தகவல்களை நாம் அறிந்திருப்போம்.
அண்டை நாடான இலங்கையில் தோட்ட தொழிலாளர்களாக பணியாற்றிய தமிழர்களை குறிப்பிடும் வகையில் கடந்த இருநூறு ஆண்டுகளாக வாழ்ந்து வரும் ஒரு சமூகம் தான் இலங்கையின் பெருந்தோட்ட சமூகம். இந்தியாவிலிருந்து சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கைக்கு சென்று அங்கு இருக்கும் தேயிலை தோட்டங்களிலும், காடுகளிலும் உழைத்து வரும் தமிழர்கள் இன்றளவும் அங்கு உள்ளனர்.
அவர்களுக்கான ஒரு அமைப்பாக இது பல ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. இந்திய அரசின் சார்பாக அவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளும் செய்து தரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வீடுகள் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை இந்த இலங்கையின் பெருந்தோட்ட சமூகத்திற்கு இந்திய அரசு இன்றளவும் செய்து வருகிறது.
இந்நிலையில் இந்த பெருந்தோட்ட சமூகத்தின் 200 ஆண்டுகள் நிறைவடைந்த ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை, முதல் நினைவு முத்திரையாக இலங்கை அரசு தற்பொழுது வெளியிட்டுள்ளது. இலங்கையின் பெருந்தோட்ட சமூகத்தின் 200வது ஆண்டுக்கான இந்த முதல் நினைவு மூத்திரையை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு வழங்கி இலங்கை அரசு கௌரவித்துள்ளது.
தமிழகத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இப்படி ஒரு பெருமை கிடைத்துள்ளதை அறிந்து, அவரது ரசிகர்களை அதை கொண்டாடி வருகின்றனர். அதே நேரம் இரு நூற்றாண்டுகளாக தமிழர்கள் தோட்ட தொழிலார்களாக அங்கு வசித்து வந்தாலும், சம்பளம் உள்ளிட்ட சில பிரச்சனைகளை அவர்கள் அங்கு சந்தித்தும் வருகின்றனர் என்பதை யாராலும் மறுக்க முடியாது.