சென்னையில் ஒருநாள், அக்னி தேவி உள்ளிட்ட படங்களை இயக்கிய ஜான் பால் ராஜ் மற்றும் ஷாம் சுந்தர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் “பிரெண்ட்ஷிப்”. இதில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், பிக்பாஸ் புகழ் லாஸ்லியா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை சேன்டோ(Senatoa) ஸ்டுடியோஸ் மற்றும் சினிமாஸ் ஸ்டுடியோ சார்பாக ஜேபிஆர் மற்றும் ஸ்டாலின் இணைந்து இந்த படத்தை தயாரித்து வருகின்றனர். இந்த படத்துக்கு டி.எம்.உதயகுமார் இசையமைத்துள்ளார்.

 

இதையும் படிங்க: பாவாடை, தாவணியில் சும்மா நச்சுன்னு இருக்கும் லாஸ்லியா... வைரலாகும் இலங்கை பெண்ணின் மனதை மயக்கும் அழகு...!

சமீபத்தில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியான நிலையில்,  இந்த படத்தில் இருந்து சூப்பர் ஸ்டார் ஆந்தம் என்ற பாடல் வெளியாகியுள்ளது. சிம்பு குரலில் உருவாகியுள்ள இந்த பாடலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ளார். ரஜினியின் அருமை பெருமைகளை அழகாக எடுத்துச் சொல்லும் இந்த படத்தின் பாடல் பட்டி, தொட்டி எல்லாம் பட்டையைக் கிளப்பி வருகிறது. 

 

இதையும் படிங்க: ஒரே ஒரு போன் கால்.... வெளவெளத்து போன ரஜினிகாந்த்... இரவெல்லாம் தூக்கமில்லாமல் தவித்த கதை தெரியுமா?

ஹர்பஜன் சிங்கின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி உள்ள இந்த பாடலில் இடம் பெற்றுள்ள ஸ்டைல் மன்னன் சூப்பர்ஸ்டார் போன்ற மாஸான வரிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. என் மாரு மேல சூப்பர் ஸ்டார்... நரம்புக்குள்ள சூப்பர் ஸ்டார் என தொடங்கும் பாடல். ரஜினிகாந்த் கையை மடித்துவிடுவது, சிகரெட் பிடிப்பது, தலை கோதிவிடுவது என அவருடைய ஸ்டைலை அங்குலம் அங்குலமாக பாராட்டியுள்ள இந்த பாடல் வேற லெவலுக்கு ட்ரெண்டாகி வருகிறது. இதுவரை 26 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்துள்ள இந்த பாடல், யூ-டியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.