ஒரே ஒரு போன் கால்.... வெளவெளத்து போன ரஜினிகாந்த்... இரவெல்லாம் தூக்கமில்லாமல் தவித்த கதை தெரியுமா?
என்ன தான் நல்ல கல்லை செதுக்கினால் அழகான சிலை கிடைக்கும் என்றாலும், அந்த கல்லை சிலையாக வடிக்க அனுபவம் மிக்க சிற்பி தேவை. அப்படி ரஜினிகாந்த் என்ற கல்லை தட்டி தட்டி சூப்பர் ஸ்டாராக்கி சிற்பி இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர். அவர்களுடையே நடந்த சுவாரஸ்யமான தகவல் குறித்து தற்போது பார்க்கலாம்.
ரஜினிகாந்த் என்ற இளைஞனுக்குள் ஒரு சூப்பர்ஸ்டார் ஒளிந்திருப்பதை தெரிந்துகொண்ட பாலச்சந்தர் தன்னுடைய ” அபூர்வ ராகங்கள் ” படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு அளித்தார். சிறு வேடம் என்றாலும் முக்கியமான வேடம். யார் அந்த புதுமுகம் என்று ரசிகர்கள் கேட்கிற அளவுக்கு ரஜினி நடித்தார்.
பின்னர் பாலசந்தர் தன்னுடைய மூன்று முடிச்சு, தப்பு தாளங்கள் ஆகிய படங்களில் கதாநாயகன் வேடம் கொடுத்தார். படிப்படியாக ரஜினி முன்னேறினார்.
ஒரு நாள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு அவரது குருநாதர் பாலச்சந்தர் அவர்களிடம் இருந்து ஒரு போன் வந்தது.
'ரஜினி, நான் ஒரு ஹிந்தி படம் ஒன்னு Recent'ஆ பார்த்தேன். ரொம்ப நல்லா இருந்தது. அதை தமிழ்ல Remake பண்ணலாம்னு இருக்கேன். நீதான் ஹீரோ. இது ஒரு Comedy Subject. அடுத்த வாரம் Shooting. ரெடியா இரு' என்றார்.
எதிர்முனையில் சற்று பதறிய ரஜினி 'சார், என்னை வச்சி காமெடி படமா? எனக்கு காமெடியெல்லாம் வராது சார்' என்றார்.
அதற்கு பாலச்சந்தர் சற்று கோபமாக 'யோவ், நீ மொதல்ல Shooting வாயா. உனக்கு காமெடி வருமா வராதான்னு நான் சொல்றேன்' என்று சொல்லி போனை வைத்துவிட்டார்.
அன்று இரவு முழுவதும் தூக்கம் வராமல் தவித்த ரஜினிகாந்த், வர சொன்னது குருநாதர் ஆச்சே என அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.
அப்படி சூப்பர் ஸ்டார் ரஜினிக்கே நம்பிக்கை இல்லாமல் Shooting வந்து, டைரக்டர் சொல்வது போல் நடித்து, பின்பு தனக்கும் காமெடி வரும் என்று அந்த படத்தின் மிக பெரிய வெற்றியை பார்த்து தெரிந்து கொண்டார். அந்த படம் தான் 'தில்லு முல்லு'.