பிரபல குணச்சித்திர நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து மாரடைப்பால் உயிரிழந்த நிலையில் அவருக்கு எம் எஸ் பாஸ்கர், உதயநிதி, சிம்பு ஆகியோர் தங்களின் இரங்கலை தெரிவித்துள்ளனர்.
நடிகர் மாரிமுத்துவுக்கு, டப்பிங் பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென அசவ்கர்யமாக உணர்ந்ததை தொடர்ந்து, சில நிமிடம் டப்பிங் பேசுவதை விட்டுவிட்டு வெளியே வந்திருக்கிறார். பின்னர் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்படவே, யாருக்கும் எதையும் சொல்லாமல் தானே தன்னுடைய காரை எடுத்து ஓட்டிக்கொண்டு மருத்துவமனைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். போகும் வழியிலேயே தன்னுடைய மகளுக்கு தொடர்பு கொண்டு, தனக்கு ஒரு மாதிரி இருக்கு எனவே நான் மருத்துவமனைக்கு செல்கிறேன் என்பதையும் கூறியுள்ளார்.
அருகே இருந்த சூர்யா மருத்துவமனைக்கு வந்ததுமே, மாரிமுத்து சுயநினைவின்றி வாசலில் விழுந்துள்ளார். பின்னர் அவரை உடனடியாக மருத்துவமனை ஊழியர்கள் அழைத்துச் சென்று மருத்துவரிடம் காட்டியபோது, மாரிமுத்துவை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் எதிர்நீச்சல் குழுவினர் மாரிமுத்துவின் மகளை தொடர்பு கொண்ட போது தான் அவர்களுக்கு மாரிமுத்து இறந்த விபரமே தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து உடனடியாக ஷூட்டிங்கிற்கு தயாரானவர்கள் பேக்கப் செய்துவிட்டு குணசேகரனை பார்க்க சிலர் மருத்துவமனைக்கும், சிலர் வீடுகளுக்கும் சென்றனர்.
Jawan Box Office: ஹிஸ்டாரிக் காலெக்ஷன்.! முதல் நாளே பாலிவுட் திரையுலகை அதிர வைத்த 'ஜவான்' பட வசூல்!

தன்னுடைய போராட்டமான கஷ்ட காலங்களை கடந்து, திரையுலகில் வளர்ந்து வந்த குணசேகரின் திடீர் மறைவு யாராலும் கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருக்கிறது. மேலும் சீரியல் குழுவினரும் பேரதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இந்த சீரியலின் இயக்குனர் திருச்செல்வம் மருத்துவமையில் செய்தியாளர்களிடம் பேசியபோது... "உடல் நலமின்றி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்திருந்தால் கூட பரவாயில்லை, திடீரென ஏற்பட்டிருக்கும் இப்படி ஒரு இழப்பு மிகுந்த வருத்தத்தை தருவதாக கூறியிருந்தார்".
எதிர்நீச்சல் சீரியல் மாரிமுத்துவின் Networth..! வைரலாகும் தகவல்!

மேலும் மாரிமுத்துவின் மரண செய்தியை அறிந்து, கவிஞர் வைரமுத்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ராதிகா, பிரசன்னா, உள்ளிட்ட பல பிரபலங்கள் அடுத்தடுத்து தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் எம்எஸ் பாஸ்கர் தன்னுடைய இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது, "இயக்குனர் திரு.மாரிமுத்து. எல்லோர்க்கும் நல்ல நண்பர். பண்பாளர். பழக இனியவர். சிந்தனையாளர். எவ்வித நோயுமின்றி, படுக்கையும் பாயுமின்றி பணியின் போதே உயிர் நீத்த பாக்கியசாலி! சமீபத்தில் திரு.கோபிநைனார் அவர்கள் படத்தில் அவரோடு இணைந்து பணியாற்றும் வாய்ப்பு பெற்றேன். சிரித்து மகிழ்ந்து உரையாடினார். காலை புறப்பட்டு குரல்பதிவிற்கு சென்றவரை காலன் கவர்ந்து சென்றான் என்ற செய்தி கேட்டு சொல்லொணா துயருற்றேன். எதிர்நீச்சல் தொடரில் அவரது நடிப்பை புகழாதோர் இல்லை! இவ்வருடத்தில் இது எனக்குத்தெரிந்து மூன்றாவது இழப்பு! அவருக்கு என் கண்ணீர் அஞ்சலியையும், அன்னாரது குடும்பத்தார்க்கு என் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்." என கூறியுள்ளார்.
கடைசி வரை நிறைவேறாமல் போன மாரிமுத்துவின் ஆசை! கனவு இல்லத்தில் ஒரு நாள் கூட வாழாமல் உயிர்விட்ட சோகம்!
நடிகர் சிம்பு X தளத்தில் போட்டுள்ள பதிவில், " மாரிமுத்து சார் இப்போது இல்லை என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமாக உள்ளது. நாங்கள் ஒன்றாக வேலை செய்த காலங்களை நினைவு கூறுகிறேன். அவரின் குடும்பத்தினருக்கு அனுதாபங்கள் என கூறியுள்ளார்.
நடிகர் கார்த்தி போட்டுள்ள பதிவில், "மாரிமுத்து சாரை நேருக்கு நேர் படத்தில் உதவி இயக்குநராக இருந்தபோது சந்தித்தேன். அவர் ஒரு அனுபவமிக்க நடிகராகவும், ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் யதார்த்தமாக முன்வைக்கக்கூடிய ஒரு அசத்தலான நடிப்பாளராகவும் இருந்தார். அவர் நன்றாகப் படித்தவர் மற்றும் சினிமா ஆர்வலராக இருந்தார். அவரது திடீர் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் என தெரிவித்துள்ளார்.
அமைச்சரும் நடிகருமான உதயநிதி போட்டுள்ள பதிவில், "திரைப்பட இயக்குநரும், நடிகருமான அண்ணன் மாரிமுத்து அவர்களின் மரணம் அதிர்ச்சியையும், மன வேதனையையும் தருகிறது. அவருடைய மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல். அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், திரையுலகினர் மற்றும் ரசிகர்களுக்கு என் ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன்" என கூறியுள்ளார்.
