"வாலு" படத்தில் சிம்புவிற்கும், ஹன்சிகாவிற்கும் காதல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அதனை இருவரும் மறுக்காத நிலையில், இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி செம்ம வைரலானது. 

இதையும் படிங்க: இப்படியும் பரவுமாம் கொரோனா வைரஸ்?... அடுத்தடுத்து பீதி கிளப்பும் விஞ்ஞானிகள்...!

இதேபோன்று தான் நயனுடன் காதலில் இருந்த போதும், அவருடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. அதனால் தான் இருவரது காதலும் பிரிந்ததாக கூறப்படுகிறது. அதேபோன்றே ஹன்சிகா, சிம்பு காதலும் முடிவுக்கு வந்துவிட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் இனி சினிமாவில் சின்சியராக கவனம் செலுத்த முடிவெடுத்த சிம்பு, ஹன்சிகாவின் கேட்ட ஒரே வார்த்தைக்காக மஹா படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க ஒப்புக்கொண்டார். அதேசமயத்தில் "மஹா" ஹன்சிகா மீது ஹாயாக படுத்து சிம்பு குட்டி தூக்கம் போடுவது போன்று இருக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று வெளியாகி செம்ம வைரலானது. 

இதையும் படிங்க: எடுப்பான முன்னழகை காட்டி... இளசுகளின் ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் யாஷிகா ஆனந்த்... வைரல் போட்டோ...!

இந்நிலையில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு சிம்பு, ஹன்சிகாவின் மஹா பட ஷூட்டிங்கில் பங்கேற்றார். அந்த படத்தில் செம்ம ஸ்டைலிஷ் ஆன பைல கெட்டப்பில் நடித்து மிரட்டி இருந்தார். படப்பிடிப்பில் சிம்பு ஹன்சிகாவுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி சோசியல் மீடியாவில் தாறுமாறு லைக்குகளை குவித்து வருகிறது. 

அந்த படத்தின் ஷூட்டிங்கின் போது ஹன்சிகா - சிம்பு நெருக்கமாக இருப்பது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. அப்படி ஹன்சிகாவை சிம்பு அணைத்து கொண்டிருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. ரியலாக அவர்கள் இருவரும் இன்னும் ஒன்று சேரவில்லை. அது மஹா ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் என்றாலும், மீண்டும் இருவரும் ஒன்று சேர்ந்துவிட்டது போல சிம்பு ரசிகர்களை அந்த போட்டோ செம்ம குஷியாக்கியுள்ளது.