இப்படியும் பரவுமாம் கொரோனா வைரஸ்?... அடுத்தடுத்து பீதி கிளப்பும் விஞ்ஞானிகள்...!
வைரஸால் பாதிக்கப்பட்டவர் தொட்ட இடத்தை தொட்டுவிட்டு வாய், கண் ஆகியவற்றை தொடுவதன் மூலமாக கொரோனா வைரஸ் பரவும் என்று சுகாதாரத்துறை நிபுணர்கள் கூறி வந்த நிலையில், சமீபத்தில் விஞ்ஞானிகள் பகீர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதல் இப்போது 180க்கும் மேற்பட்ட நாடுகளில் உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொடிய வைரசால் தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் கொத்து கொத்தாக செத்து மடிகின்றனர். அந்த வகையில் உலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டி உள்ளது. அதே போல் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்திருப்பது மக்களிடையே பெரும் சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: எடுப்பான முன்னழகை காட்டி... இளசுகளின் ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் யாஷிகா ஆனந்த்... வைரல் போட்டோ...!
கொரோனா வைரஸ் தும்மல், இருமல் வழியாகவும், வைரஸால் பாதிக்கப்பட்டவர் தொட்ட இடத்தை தொட்டுவிட்டு வாய், கண் ஆகியவற்றை தொடுவதன் மூலமாக கொரோனா வைரஸ் பரவும் என்று சுகாதாரத்துறை நிபுணர்கள் கூறி வந்த நிலையில், சமீபத்தில் விஞ்ஞானிகள் பகீர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் கழிப்பறை தண்ணீர் மூலமாகவும் வைரஸ் தொற்று மற்றொருவருக்கு பரவ வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஸ்டான்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வின் படி மனித கழிவின் மூலமாகவும் கொரோனா மற்றவருக்கு பரவ வாய்ப்புள்ளதாக அதிர்ச்சி கிளப்பியுள்ளனர்.
இதையும் படிங்க: அமெரிக்காவை மிரட்டும் கொரோனா.... முக்கிய முடிவில் இருந்து பின்வாங்கிய ட்ரம்ப்...!
ஆனால் கைகள் மூலம் கொரோனா தொற்று ஏற்படுவதை விட இதில் அபாயம் குறைவு தான் என்று தெரிவித்துள்ளனர். மேலும் பொதுக்கழிப்பறைகளை முடிந்தவரை தவிர்த்து விட்டு, வீட்டில் உள்ள கழிப்பறைகளை மட்டுமே பயன்படுத்தும் படி அறிவுறுத்தியுள்ளனர்.