நடன குரங்குகள்... வெறித்தனமான கேப்ஷனுடன் ட்ரெண்டிங் பாடலுக்கு சித்தார்த்துடன் ஆட்டம் போட்ட அதிதி ராவ்! வீடியோ.
அதிதி ராவ் மற்றும் சித்தார்த் ஜோடி மால டம் டம் பாடலுக்கு, டான்ஸ் ஆடி வித்யாசமான கேப்ஷனுடன் வெளியிட்டுள்ள வீடியோ, சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற நடிகர் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் இருவரும், தெலுங்கு படத்தில் ஒன்றாக இணைந்து நடித்த போது ஏற்பட்ட நட்பு தற்போது இவர்களை புது காதலர்களாக மாற்றி உள்ளது. இவர்கள் இருவரும் ட்ரெண்டிங் பாடலுக்கு நடனமாடி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள வீடியோ ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.
பொதுவாக பிரபலங்கள் பற்றிய கிசுகிசு வருவது வழக்கமான ஒன்று தான். ஒரு சில பிரபலங்கள் தங்களை பற்றிய வதந்திக்கு விளக்கம் கொடுத்து முற்றுப்புள்ளி வைப்பார்கள். இன்னும் சிலர் என்ன தான் தன்னை பற்றி செய்திகள் வந்தாலும் அதுகுறித்து துளியும் கண்டு கொள்ள மாட்டார்கள். அந்த வகையில் தற்போது புது காதல் ஜோடிகளாக வலம் வரும், அதிதி ராவ் மற்றும் சித்தார்த் ஜோடி, லிவிங் டூ கெதர் வாழ்க்கை வாழ்த்துவருவதாக கூறப்பட்ட நிலையில், இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் இருந்தபடி நடனமாடி வெளியிட்டுள்ள வீடியோ மூலம் அந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.
இதுவரை தங்களின் காதல் குறித்த செய்திக்கு எந்த பதிலும் கூறாத சித்தார்த் மற்றும் அதிதி ராவ் ஜோடி, வெளிப்படையாக பல இடங்களுக்கு வருகிறார்கள். கடந்த ஓரிரு மதத்திற்கு முன்பு கூட பிரபல தெலுங்கு நடிகரான சர்வானந்த் மற்றும் ரக்ஷிதா ஜோடிகளின் திருமண நிச்சயதார்த்தத்தின் போது சித்தார்த் மற்றும் அதிதி ராவ் இருவரும் ஜோடியாக வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்ததோடு, லன்ச், ஷாப்பிங், டேட்டிங் என மும்பையில் உள்ள பல இடங்களுக்கு இணை பிரியாத காதலர்களாகவே வலம் வந்துகொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் மகிழ்ச்சியான காதல் ஜோடி என்பதை நிரூபிக்கும் விதமாக, அதிதி ராவ் மற்றும் சித்தார்த் ஜோடி, தற்போது சமூக வலைத்தளத்தில் செம்ம ட்ரெண்டிங் சாங்காக இருக்கும் மால டம் டம் பாடலுக்கு டான்ஸ் ஆடி உள்ளனர் . இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் காதலை உறுதி செய்யாத இந்த ஜோடி, மறுக்கவும் இல்லை. எனவே அதிதி ராவ் மற்றும் சித்தார்த் ஜோடி விரைவில் தங்களின் திருமண தேதியை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்க படுகிறது. எனினும் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
மிக மோசமான கவர்ச்சி உடையில் விருது விழாவிற்கு வந்த ராஷ்மிகா மந்தனா..! சன்னி லியோனுக்கே போட்டியா?