நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தை கேள்வி பட்டு, அவருடைய குடும்பத்தை சேர்ந்த ஒருவர் திடீர் என மரணமடைந்துள்ள சம்பவம், சுஷாந்த் குடும்பத்தை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் செய்திகள்: ஆர்யாவை துரத்தி துரத்தி காதலித்த அபர்ணதியா இது? ஜி.வி.பிரகாஷுடன் செம்ம ரொமான்ஸ்..! வீடியோ
 

பாலிவுட் திரையுலகில் எந்த ஒரு நடிப்பு பின்னணியும் இன்றி சின்னத்திரையில் கால் பதித்து, பின் தன்னுடைய திறமையால் வெள்ளித்திரையில் நடிக்க துவங்கி, ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் சுஷாந்த் சிங். இவர் ஞாயிற்று கிழமை (ஜூன் 14 )  மதியம் 2 மணி அளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு மரணம் அடைந்த சம்பவம் ஒட்டு மொத்த பாலிவுட் திரையுலகத்தையே கலங்க வைத்துள்ளது. இவருடைய மறைவிற்கு பலர் தொடர்ந்து தங்களுடைய இரங்கலையும் தெரிவித்து வருகிறார்கள்.

34 வயதாகும் இவர், பாலிவுட் திரையுலகினரால் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டதாகவும், அவர் வளர்ச்சி பிடிக்காமல் பலர் அவருக்கு எதிராக படவாய்ப்புகள் கிடைக்க கூடாது என சதி செய்து வந்த போதும், அனைத்தையும் வெளிக்காட்டி கொள்ளாமல் சிரித்த முகத்துடனே சுஷாந்த் வலம் வந்துள்ளார். மேலும் மன அழுத்தத்திற்கும் மருந்துகள் உட்கொண்டு வந்துள்ளார்.

மேலும் செய்திகள்: கொட்டும் மழையில் நனைந்தபடி சுஷாந்த் சிங்கிற்கு அஞ்சலி! இதயத்தை நொறுக்கும் புகைப்படங்கள்!
 

லாக் டவுன் பிறப்பிக்கப்படுவதற்கு முன் தன்னுடைய சொந்த ஊரான பாட்டனாவிற்கு சுஷாந்த் சிங் வந்த போது, எந்த கவலையும் இன்றி மிகவும் சந்தோஷமாக, குறிப்பாக மன அழுத்தம் இல்லாமல் இருந்ததாக அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சுஷாந்த் சிங் இறந்த செய்தியை கேட்டது முதல், அவருடைய சகோதரரின் மனைவி, சுதா தேவி என்பவர் அவருடைய சொந்த ஊரான பீகாரில் உள்ள பூர்னியாவில் காலமானார். சுஷாந்த் மீது மிகுந்த பாசம் வைத்திருந்த அவர், இந்த செய்தியை கேள்வி பட்டதில் இருந்து, உணவு மற்றும் தண்ணீர் கூட குடிப்பதை நிறுத்திவிட்டு அழுது கொண்டே இருந்துள்ளார். 

மேலும் செய்திகள்: நிறைவேறாத 50 கனவுகளோடு உயிரை விட்ட சுஷாந்த்..! என்னென்ன தெரியுமா?
 

மேலும் சுஷாந்த் சிங்கின் இறுதி சடங்கு மும்பையில் நடந்து முடிவதற்குள் அவருடைய உயிரும் பிரிந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்கனவே சுஷாந்த் சிங் மறைவால் துடித்துக்கொண்டிருந்த அவருடைய குடும்பத்தினரை இந்த சம்பவம் நிலைகுலைய செய்துள்ளது.

மும்பையில் நடந்த சுஷாந்த் சிங்கின் இறுதிச் சடங்கில் கடும் மழையையும் பொருட்படுத்தாமல், இவருடன் இணைந்து நடித்த  இணை நடிகர்கள் ஷ்ரத்தா கபூர், கிருதி சனோன், ரன்வீர் ஷோரே, விவேக் ஓபராய், மற்றும் பல இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.