தமிழில், தொடர்ந்து தரமான கதைகளை கொண்ட படங்களை இயக்கி, வெற்றி இயக்குனர் என்பதை தாண்டி, எதார்த்தமான இயக்குனர் என ரசிகர்களால் பார்க்கப்படுபவர் இயக்குனர் 'வசந்த பாலன்' . இவர் தற்போது ஜி.வி.பிரகாஷ்குமாரை வைத்து இயக்கியுள்ள திரைப்படம் 'ஜெயில்'.

இந்த படத்தில், நடிகர் ஆர்யா திருமணத்திற்கு பெண் தேடிய நிகழ்ச்சியான எங்கள் வீடு மாப்பிள்ளை நிகழ்ச்சியில், ஆர்யாவை துரத்தி துரத்தி காதலித்து, அவருக்காக அழுது ஆர்ப்பாட்டம் செய்த, தஞ்சாவூர் பொண்ணு அபர்ணதி இந்த படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார்.

இந்த படத்தின் அணைத்து பணிகளும் முடிவடைந்துள்ள நிலையில், திரைப்படம் கொரோனா ஊரடங்கு முடிந்த கையோடு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் தனுஷ் மற்றும் நடிகை அதிதி ராவ் இணைந்து, பாடியுள்ள காதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் மிகவும் நெருக்கமான காட்சிகளில் அபர்ணதி மற்றும் ஜிவி பிரகாஷ் நடித்துள்ளனர்.  'காத்தோடு காத்தானேன்' என்ற பாடல் வீடியோ பாடலில் வரும் காட்சிகளையும் பார்க்கும் போது, இந்த படமும் வெயில், அங்காடித் தெரு, போன்ற எதார்த்தமான கதை அம்சத்தை கொண்டு வசந்தபாலன் இயக்கியுள்ளார் என்பது தெரிகிறது. 

மேலும் இந்த படத்தில்  ராதிகா, ரோனித் ராய், யோகிபாபு, ரோபோ சங்கர், பாபி சிம்ஹா உட்பட பலர் நடித்துள்ளனர்.

தற்போது வெளியாகியுள்ள பாடல் வீடியோ இதோ...