Dance master Jayanth: அதிர்ச்சி.. நடன இயக்குனர் கூல் ஜெயந்த் மரணத்திற்கு இதுதான் காரணமா? சோகத்தில் திரையுலகம்
பிரபல நடன இயக்குனர் கூல் ஜெயந்த் (Dance Master Jayanth) திடீர் மறைவு ஒட்டுமொத்த திரையுலக ரசிகர்களையும், பிரபலங்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
பிரபல நடன இயக்குனர் கூல் ஜெயந்த் (Dance Master Jayanth) திடீர் மறைவு ஒட்டுமொத்த திரையுலக ரசிகர்களையும், பிரபலங்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
மிகவும் போட்டிகள் நிறைந்த திரையுலகில் சாதிப்பது என்பது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்பட்டு வரும் நிலையில், நடன இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் நடிகராகவும் மாறியவர் கூல் ஜெயந்த்.
மேலும் செய்திகள்: Valimai Movie: பார்த்தாலே கொல நடுங்குது.. இப்படி ஒரு காட்சியில் நடித்தாரா தல அஜித்! 'வலிமை' நியூ BTS போட்டோஸ்!
நடிகர் அப்பாஸ், வினீத், தபு நடிப்பில், இயக்குனர் கதிர் இயக்கத்தில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான 'காதல் தேசம்' படத்தின் மூலம் நடன இயக்குனராக அறிமுகமானவர் கூல் ஜெயந்தி. இவர் முதல் முதலாக நடனம் அமைத்த, இந்த படமே இவரை பிரபலமடைய செய்தது. குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற 'முஸ்தபா முஸ்தபா' பாடல் மற்றும் 'கல்லூரி சாலை' ஆகிய பாடல்களும், அதன் நடன அசைவுகளும், அன்று முதல் இன்று வரை ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகள்: Keerthy Suresh: சத்தமில்லாமல் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய கீர்த்தி சுரேஷ்... அட ஹீரோ இந்த வில்லன் நடிகரா?
மேலும் தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களான அஜித், விஜய், போன்ற முன்னணி நடிகர்கள் படங்களிலும் பல பாடல்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், உள்ளிட்ட மொழி படங்களிலும் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றியுள்ளார். இவர் இந்தியன் மைக்கில் ஜாக்சன் பிரபுதேவா மற்றும் அவரது சகோதரர் ராஜசுந்தரம் ஆகியோரின் நடன குழுவில் இருந்து வந்து, சுமார் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடன இயக்குனராக மட்டுமின்றி, 'கோழி ராஜா' என்ற படத்தின் மூலம் நடிகராகவும் பிரபலமானார்.
மேலும் செய்திகள்: Biggboss Tamil 5: பிக்பாஸ் 5 வின்னர் யார்? வயல் கார்டு போட்டியாளராக உள்ளே சொல்கிறாரா நமீதா? அவரே கூறிய பதில்!
இந்நிலையில் இவர் கடந்த சில வருடங்களாகவே புற்று நோய் காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில், தற்போது மரணமடைந்துள்ளார். இன்று மாலை 4 மணி அளவில் இவரது இறுதிச்சடங்குகள் நடைபெறும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது இவருடைய உடல், உறவினர்கள், ரசிகர்கள், மற்றும் பிரபலங்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலர் தங்களுடைய இரங்கலை சமூக வலைதளத்தின் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.