Valimai Movie: பார்த்தாலே கொல நடுங்குது.. இப்படி ஒரு காட்சியில் நடித்தாரா தல அஜித்! 'வலிமை' நியூ BTS போட்டோஸ்!
'வலிமை' (Valimai) பட ஷூட்டிங் ஸ்பாட்டில், தல அஜித் (Ajithkumar)... சக கலைஞர்களுடனும், நெஞ்சை பதற வைக்கும் ஆக்ஷன் காட்சியிலும் நடித்த புதிய BTS புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி தல ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.
இயக்குனர் எச்.வினோத் (h vinoth) இயக்கத்தில் இரண்டாவது அஜித் இணைந்து நடித்துள்ள திரைப்படம் வலிமை. இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பு பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
வரும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு இந்த படம் வெளியாக உள்ள நிலையில், வலிமை படத்தின் அடுத்தடுத்த தகவலுக்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக சில புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது.
வரும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு இந்த படம் வெளியாக உள்ள நிலையில், வலிமை படத்தின் அடுத்தடுத்த தகவலுக்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக சில புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது.
உண்மையில் இது சண்டை காட்சியா... அல்ல சாகச காட்சியா என ரசிகர்கள் நினைக்கும் அளவிற்கு படு மாஸாக அந்த காட்சி எடுக்கப்பட்டுள்ளது இந்த புகைப்படங்கள் மூலம் தெரிகிறது.
அந்தரத்தில் பறந்தபடி, அஜித் பைக் சேசிங் காட்சியில் ஈடுபட்டுள்ளதை பார்க்கும் போதே கொல நடுங்குகிறது. தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாக அதனை தல ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
ஏற்கனவே கற்பனைக்கு எட்டாத அளவிற்கு, அந்தரத்தில் தொங்கியபடியெல்லாம் ஸ்டண்ட் காட்சிகளில் அஜித் நடித்துள்ளார் என்ற தகவல் வெளியான நிலையில் அதனை உறுதி படுத்தியுள்ளது தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்கள்.
மேலும் 'வலிமை' படத்தின் ஸ்டண்ட் காட்சியில் ஈடுபட்ட குழுவினரின் சில புகைப்படங்களும் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.
இவை அனைத்தும் இந்த படம் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் விதமாகவே உள்ளது என தல ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.