Biggboss Tamil 5: பிக்பாஸ் 5 வின்னர் யார்? வயல் கார்டு போட்டியாளராக உள்ளே சொல்கிறாரா நமீதா? அவரே கூறிய பதில்!
விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் 'பிக்பாஸ் 5' (biggboss tamil 5) நிகழ்ச்சி குறித்தும் பிக்பாஸ் வின்னர் யார்? என்பது குறித்தும் தன்னுடைய கருத்தை முதல் முறையாக ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார் திருநங்கை போட்டியாளராக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நமீதா மாரிமுத்து (namitha marimuthu).
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் மூன்றாம் தேதி, பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் துவங்கிய பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில், பல புதுமுகங்களும் போட்டியாளராக கலந்து கொண்டனர்.
திருநங்கை மாடலான நமீதா, கானா இசைப் பாடகியான இசை வாணி, கூத்துப்பட்டறை மூலம் பிரபலமான தாமரைச்செல்வி, யூடியூபர் அபிஷேக் ராஜா, என யாராலும் யூகிக்க முடியாத அளவுக்கு பல பிரபலங்களை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பார்க்க முடிந்தது.
எப்போதும் 16 போட்டியாளர்களுடன் துவங்கும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இம்முறை 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். குறிப்பாக சரவணன் மீனாட்சி ராஜு, தொகுப்பாளர் பிரியங்கா, இமான் அண்ணாச்சி, ஜெமினி கணேசனின் பேரன் அபிநய் , பிரபல மாடல் அழகி அக்ஷரா, ஐசரி வருண், பாவணி ரெட்டி போன்றவர்களின் வருகை இந்த நிகழ்ச்சியின் மேல் இருந்த எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது.
தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி 5 வாரங்களை எட்டியுள்ள நிலையில், இரண்டாவது வாரத்தில் நாடிய வெளியேறினார். அவரைத் தொடர்ந்து பிரபல யூடியூப் அபிஷேக் ராஜா, சின்ன பொண்ணு மற்றும் சுருதி ஆகிய நான்கு பேர் குறைந்த வாக்குகளுடன் வெளியே சென்றுள்ளனர்.
ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக முதல் வாரத்திலேயே திருநங்கை போட்டியாளர் நமீதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஒரு சில காரணங்களால் வெளியேறியதாக கூறப்பட்டது.
இந்நிலையில் முதல்முறையாக பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உரையாடியுள்ளார் நமீதா மாரிமுத்து அதில் ரசிகர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள தாமரை ஒரு அப்பாவியா என கேட்கப்பட்ட கேள்விக்கு? பதிலளித்த நமீதா, அவர் அப்பாவியான என்பது தனக்கு தெரியாது என்றும், ஆனால் பிக்பாஸ் கேமை திறம்பட விளையாடும் அளவிற்கு அவர் வலுவான இல்லை என்பது தன்னுடைய கருத்து என தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது என எழுப்பப்பட்ட கேள்விக்கு சிபி அல்லது இசைவாணி ஆகியோர் வெற்றியாளர்களாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் ரசிகர்கள் பலரும் ராஜு அல்லது பிரியங்கா வெற்றியாளர்களாக இருக்க வாய்ப்புண்டு என்று கணித்து உள்ள நிலையில் இவரது கணிப்பு எந்த அளவிற்கு பலிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ரசிகர் ஒருவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து பாதியிலேயே நீங்கள் வெளியேறியதால் வயல்காட்டு மூலம் உள்ளே போக வாய்ப்பு உள்ளதா? என எழுப்பப்பட்ட கேள்விக்கு உள்ளே போகலாம்... போகாமலும் இருக்கலாம்... என தன்னுடைய சாமர்த்தியமான பதில் மூலம் ரசிகர்களை குழப்பி விட்டுள்ளார் இவரது இந்த பதில்கள் தற்போது வைரலாகி வருகிறது.