நடிகர் தூக்கிட்டு தற்கொலை..! திரையுலகினர் அதிர்ச்சி..!
நடிகரும், தயாரிப்பாளருமான குமாரராஜன் என்பவர் அவரது வீட்டில் திடீர் என தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகரும், தயாரிப்பாளருமான குமாரராஜன் என்பவர் அவரது வீட்டில் திடீர் என தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழில் கடந்த 2013 ஆம் ஆண்டு, பாலு ஆனந்த் என்பவர் இயக்கத்தில் 'சந்தித்ததும் சிந்தித்ததும்' என்ற படத்தை தயாரித்து, நடித்தவர் குமாரராஜன். இந்த படத்தில் இவரது காமெடி காட்சிகள் பெரிதும் ரசிகர்களை கவர்ந்தது. இந்த படத்தில், நடிகர் கொட்டாச்சி, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்நிலையில் இவர் நாமக்கல்லில் உள்ள தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்கிற கோணத்தில் போலீசார் விசாரணையையும் மேற்கொண்டு வருகிறார்கள். நடிப்பு தயாரிப்பை தாண்டி பாடி தொழிலதிபராகவும் அறியப்பட்டவர் குமாரராஜன்.
மேலும் செய்திகள்: நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ.2,000 நிவாரண நிதி: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
'சந்தித்ததும் சிந்தித்ததும்' படத்தைத் தொடர்ந்து தற்போது 'துப்பார்க்கு துப்பாய', 'ரெண்டுல ஒண்ணு' ஆகிய படங்களில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். இந்நிலையில் அவரது தற்கொலை திரையுலகினர் மட்டும் நாமக்கல் பகுதி மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.