Asianet News TamilAsianet News Tamil

நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ.2,000 நிவாரண நிதி: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

கொரோனாவின் இரண்டாவது அலையால் பாதிக்கப்பட்டுள்ள, நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ.2000, நிதி உதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
 

Rs 2000 relief fund for folk artists Tamil Nadu government announced
Author
Chennai, First Published Apr 12, 2021, 11:07 AM IST

கொரோனாவின் இரண்டாவது அலையால் பாதிக்கப்பட்டுள்ள, நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ.2000, நிதி உதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவிற்கு படையெடுத்த கொரோனா தொற்று, தமிழகத்திலும் பரவலாக பரவி பொதுமக்கள் பிரபலங்கள் என யாரையும் விட்டுவைக்காமல் தன்னுடைய கொடூர முகத்தை காட்டிவருகிறது. இதுவரை சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த, மத்திய, மாநில அரசுகளும் பல்வேறு முயற்சியைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, 45 வயதிற்கு மேல் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்: மெளன ராகம் சீரியல் சக்தியா இது?... முட்டி வரை இருக்கும் குட்டை பாவாடையில் குளு குளு கிளாமர் கிளிக்ஸ்!
 

Rs 2000 relief fund for folk artists Tamil Nadu government announced

இந்நிலையில் ஏற்கனவே கடந்த ஆண்டு கொரோனாவை இந்தியாவில் கட்டுப்படுத்தும் முயற்சியாக உழு ஊரடங்கு உத்தரவு சுமார் ஆறு மாதத்திற்கு மேல் போடப்பட்டது. அதனால் சிறு, குறு தொழில்கள், பெரிய பெரிய நிறுவனங்கள், திரைத்துறை, நாடக கலைஞர்கள், உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டனர். ஏழை எளிய மக்கள் பலர் தங்களுடைய அன்றாட செலவுக்கு கூட பணம் இல்லாமல் அல்லாடும் நிலை ஏற்பட்டது.  பின்னர் மெல்ல மெல்ல ஊரடங்கு தகர்த்தப்பட்டு வந்த நிலையில், கொரோனவும் சற்று தணிந்தது.

மேலும் செய்திகள்: அம்புட்டு பேரும் அவுட்... நெஞ்சை நிமிர்த்தி போஸ் கொடுத்து... இளம் நெஞ்சங்களை மூச்சு முட்ட வைத்த அனுபமா!
 

Rs 2000 relief fund for folk artists Tamil Nadu government announced

இதனால் மக்கள் நிம்மதி அடைந்த நிலையில், மீண்டும் கொரோனாவின் இரண்டாவது அலை வேகம் எடுத்துள்ளது. தமிழகத்தில் மட்டும் ஒரே நாளில் சும்மார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  இந்நிலையில் இதனை கட்டுப்படுத்த மீண்டும் முழு ஊரடங்கு போடலாம் என்கிற தகவலும் வெளியாகி உள்ளது.  

மேலும் செய்திகள்:காதலன் விக்னேஷ் சிவனுடன்... அவசர அவசரமாக தனி விமானத்தில் கொச்சிக்கு பறந்த நயன்தாரா! இது தான் காரணம்!
 

Rs 2000 relief fund for folk artists Tamil Nadu government announced

இந்நிலையில் இரண்டாவது அலையால் மீண்டும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நாடக கலைஞர்களுக்கு மாநில அரசு 2000 ரூபாய் நிதி உதவியை அறிவித்துள்ளது.  இதுகுறித்த அரசாணையும் தற்போது வெளியாகியுள்ளது.  நாடக கலைஞர்களுக்கான நலவாரியத்தில் பதிவு செய்த 6810 கலைஞர்களுக்கு தலா 2000 வீதம் 1,36,20,000 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios