குழந்தை நட்சத்திரமாக வெள்ளித்திரையில் அறிமுகமாகி,  சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நடித்து பிரபலமானவர் நீலிமாராணி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த அரண்மனைக்கிளி சீரியலில் வில்லி ரோலில் நடித்து வந்த இவர்,  திடீர் என இந்த சீரியலில் இருந்து விலகி விட்டதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கடந்த இரண்டு வருடமாக, விஜய் டிவியில் பல்வேறு திருப்புமுனைகளுடன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் அரண்மனைக்கிளி. இதில் மோனிஷா, சூர்யா தர்ஷன், பிரகதி, மைனா நந்தினி, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்: கோரோனோ பிரேக்... பழமையை கையில் எடுக்க சொன்ன குஷ்பு: வரவேற்கும் நெட்டிசன்கள்!

குறிப்பாக நீலிமாவின் கேரக்டருக்கு இந்த சீரியலில் முக்கியத்துவம் அதிகமாகவே கொடுக்கப்பட்டு வந்தது. இவர் திடீரென இந்த சீரியலில் இருந்து விலகுவதாக தெரிவித்து, அதற்கான காரணத்தை வெளியிடவில்லை.

நீலிமா பதிவிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், நான் கேமரா முன் நிற்கும்போது, மிகவும் மகிழ்ச்சியான ஒருவராகவே இருந்துள்ளேன். குழந்தை நட்சத்திரமாக இருந்தது முதல், தற்போது வரை நடித்து வருகிறேன். பல மாற்றங்கள் என் வாழ்க்கையில் நிகழ்ந்துள்ள போதிலும் அதனை ஆச்சரியத்துடன் ஏற்றுக்கொண்டேன். 'துர்கா நீ போய் வா' எனக்கூறி நீங்கள் தான் என் பலம் எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள் என ரசிகர்களிடம் கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்:படவாய்ப்பு தருவதாக குஜால் செய்துவிட்டு கழட்டி விட்ட இயக்குனர்கள்! அடுத்த ஸ்ரீரெட்டியாக மாறிய இலக்கியா!

நீலிமாவின் இந்த திடீர் விலகல், அவருடைய சின்னத்திரை ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.