கோரோனோ பாதிப்பு பற்றி மக்கள் அச்சப்படாமல் இருக்க பிரபலங்கள் முதல், மருத்துவர்கள், மத்திய மற்றும் மாநில அரசுகள் மிகவும் பாதுகாப்பாக இருப்பது பற்றிய அவசியத்தை எடுத்து கூறி  வருகிறார்கள். மேலும் நாளுக்கு நாள், கோரோனோ வைரஸின் தாக்கம் இந்தியா மற்றும் இன்றி தமிழகத்திலும் அதிகம் பரவி வருகிறது.

இதனால், தமிழகத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே போல், ஐடி, போன்ற நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு, வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகை குஷ்பு, கோரோனோவால் கிடைத்த பிரேக்கில்... பழமையான விளையாட்டுகளை கையில் எடுக்க கூறியுள்ளார். 

கோரோனோ பாதிப்பால் வெளியில் எங்கும் செல்ல முடியாமல், வீட்டில் முடங்கி இருப்பவர்கள், தாயம், பல்லாங்குழி, பரமபதம், போன்றவற்றை விளையாடுங்கள் என கூறியுள்ளார். இவரின் இந்த ட்விட்டுக்கு நெட்டிசன்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

தற்போது குஷ்பு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், உருவாகி வரும் அண்ணாத்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.