ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பாகும் டாப் சீரியல் செம்பருத்தி. ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. அகிலாண்டேஸ்வரி, ஆதி, பார்வதி என அனைத்து கதாபாத்திரங்களுக்கும் தனித்தனியாக ரசிகர்கள் உள்ளனர். கடந்த ஜூன் 5-ம் தேதி முதல் 60 பேருடன் சின்னத்திரை படப்பிடிப்பை நடத்தலாம் என்று நிபந்தனைகளுடன் தமிழக அரசு அனுமதி அளித்தது. 

 

இதையும் படிங்க:  “அது கல்யாணமே இல்ல”... உண்மையை ஓபனாக போட்டுடைத்த வனிதா வக்கீல்...!

மேலும் திரைப்பட போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை நடத்தவும் கடந்த மாதம் அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து சின்னத்திரை படப்பிடிப்பு, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வந்தன. அதேவேளையில் சென்னையில் கொரோனா பரவல் அதிகரித்திருப்பதால், கடந்த ஜூன் 19-ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்தச் சமயத்தில் சின்னத்திரை படப்பிடிப்பு முழுவதுமாக நிறுத்தப்பட்டது. இதனால் மீண்டும் சின்னத்திரை படப்பிடிப்பு எப்போது தொடங்கப்படும் என்ற கேள்வி எழுந்தது.

 

இதையும் படிங்க: வனிதா - பீட்டர் பால் அடுத்த முத்த லீலை... செய்யுறதை எல்லாம் செஞ்சிட்டு விளக்கம் வேற....!

இதனால் வீட்டிற்குள் முடங்கியுள்ள சின்னத்திரை பிரபலங்கள் பலரும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வருகின்றனர். போட்டோஷூட் ஆன்லைன் பேட்டி என செம்ம பிசியாக வலம் வருகின்றனர். அதனால் செம்பருத்தி சீரியலின் பழைய எபிசோடுகள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இந்த தொடரில் ஆதியின் தம்பியாக ஆங்கர் கதிர் நடித்து வருகிறார். இவருக்கும் தற்போது நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. சத்தமே இல்லாமல் எளிமையான முறையில் திருமணத்தை முடித்துள்ள கதிர் தனது வருங்கால மனைவியுடன் போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார். 

 

இதையும் படிங்க:  பாவாடை, தாவணியில் சும்மா நச்சுன்னு இருக்கும் லாஸ்லியா... வைரலாகும் இலங்கை பெண்ணின் மனதை மயக்கும் அழகு...!

அத்துடன் லாக்டவுன் காரணமாக நிறைய பேரை அழைக்க முடியாமல் போய்விட்டது. எனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது. என்னை மன்னித்து விடுங்கள். லாக்டவுன் நேரத்தில் உள்ள இ-பாஸ் பிரச்சனைகள் காரணமாக நிறைய பேரை அழைக்க முடியவில்லை. கல்யாணத்திற்கு நிச்சயம் அனைவரையும் அழைப்பேன். எல்லாரும் கண்டிப்பாக வந்து எனக்கு வாழ்த்து கூறுங்கள். உங்களுடைய அனைவரது வாழ்த்துக்களையும் பெற காத்திருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.