திரைப்படத்துறையில் ஒரு சில வருடங்கள் நீடிப்பதே கடினமான காரியமாக உள்ள நிலையில், ஹீரோ, வில்லன், குணச்சித்திர நடிகன் என பல அவதாரங்களை எடுத்து பல வருடங்களாக தன்னுடைய பயணத்தை இன்றும் தொடர்ந்துகொண்டிருப்பவர் நடிகர் சத்யராஜ்.

அவருடைய மகன் சிபிராஜ் தற்பொழுது தொடர்ச்சியாக தமிழ் படங்களில் நடித்து வருகிறார். திரைத்துறையில் நாட்டமில்லாத சத்யராஜின் மகள் ஊட்டச்சத்து நிபுணராகப்  பணிபுரிந்து வருகின்றார். 

ஊட்டச்சத்து நிபுணராக பணிபுரியும் திவ்யாவிடம், உயிருக்கு கேடுவிளைவிக்கும் ஊட்டச்சத்து மருந்துகளை விற்பனை செய்யக்கோரி ஒருசில வெளிநாட்டு  ஊட்டச்சத்து கம்பெனிகள் தொடர்பு கொண்டுள்ளனர். அதற்க்கு  திவ்யா மறுத்ததால் கொலைமிரட்டல் விடுத்துள்ளனர். இந்த விஷயத்தினை கருத்தில் கொண்டு திவ்யா ஊட்டச்சத்து துறையில் நடக்கும் பல்வேறு ஊழல்கள் குறித்து பிரதமர் அவர்களுக்கு சென்ற வருடம் கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.

ஆனால் அந்த கடிதத்திற்கு இப்போது வரை எந்த பதிலும்  கிடைக்கவில்லையாம். 

எனவே உடல் எடையை விரைவில் குறைக்கலாம், ஒரே மாதத்தில் சிக்ஸ் பேக் வைத்துவிடலாம், குழந்தைகள் அறிவாக வளர்வார்கள் என்று கூறி விற்கப்படும் ஊட்டச்சத்து மருந்துகளை வாங்கி உட்கொள்ளாதீர்கள். அது உடம்பிற்கு நிச்சயம் மிகப்பெரிய தீங்கினை ஏற்படுத்துவதோடு உயிருக்கே கேடு விளைவிக்கும் என்று எச்சரித்திருக்கிறார் திவ்யா.