பிரபல நடிகரும், அரசியல் வாதியுமான சரத்குமார்... தன்னுடைய அரசியல் பணியில் ஆர்வம் காட்டி வந்தாலும், திரை திரையில் அவ்வபோது, ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். மேலும் இப்போது துப்பறியும் கதையில் உருவாகும் வெப் சீரிஸ் ஒன்றிலும் நடிக்க தயாராகி உள்ளார்.

இந்நிலையில், இவர் தன்னுடைய மகள் வரலட்சுமியிடம் மனம் உருகியவாறு, மன்னிப்பு கேட்டுள்ளார்.

சரத்குமார், தன்னுடைய மனைவி ராதிகா மற்றும் மகள் வரலக்ஷ்மியுடன் 'பிறந்தால் பராசக்தி' என்கிற படத்தில், முதல் முறையாக இணைந்து நடிக்க உள்ளார். இந்த படம் குறித்து அவர் பேசுகையில் மகளை பற்றி மிகவும் பெருமையாகவும், தான் செய்த தவறுக்கு மனம் உருகி மன்னிப்பு கேட்டு பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், வரலட்சுமி நடித்த முதல் படமான 'போடா போடி' திரைப்படம் வெளியாக ஒரு சில பிரச்சனைகள் இருந்தது. அதற்காக அவர் நெடு நாட்கள் காத்திருந்தார். அப்போது ஒரு தந்தையாக அவருக்கு நான், அவருடைய திறமையை மதித்து மற்ற படங்களில் நடிக்க வழி வகை செய்திருக்க வேண்டும்.

ஆனால் நான் அப்படி எதுவும் செய்யவில்லை. அதை நினைத்து இப்போது வருத்தமாக இருக்கிறது. இந்த செயலுக்கு கண்டிப்பாக அவரிடம் நான் மன்னிப்பு கேட்க வேண்டும். ஆனால் இப்போது அவருடைய திறமையை நிரூபித்து, அசைக்க முடியாத ஒரு நடிகையாக அவர் ஜெயித்துள்ளார் என பெருமையாக தன்னுடைய மகளை பற்றி பேசியுள்ளார் சரத்குமார்.