நடிகர் சந்தானம் நடிப்பில் இன்று வெளியான 'வடக்குப்பட்டி ராமசாமி' திரைப்படம் எப்படி இருக்கிறது என்று சமூக வலைத்தளத்தில், ரசிகர்கள் கூறியுள்ள விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்ப்போம். 

தனக்கு ஏற்ற போல் காமெடி நிறைந்த கதைக்களத்தில் ஹீரோவாக நடித்து கலக்கி கொண்டிருக்கும் சந்தானம், இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் 'டிக்கிலோனா' படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக இணைத்து நடித்துள்ள திரைப்படம் 'வடக்குப்பட்டி ராமசாமி'. முழுக்க முழுக்க காமெடி படமாக எடுக்கப்பட்டுள்ள இந்த பாதை ரோமியோ பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

'வடக்குப்பட்டி ராமசாமி' படத்தில், சந்தானம் மற்றும் மேகா ஆகாஷ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க, முக்கிய ரோலில்... நிழல்கள் ரவி, எம்.எஸ். பாஸ்கர், மாறன், தமிழ், நான் கடவுள் ராஜேந்திரன், ஜான் விஜய், ரவிமரியா, சேசு, சுரேஷ், பிரசாந்த் மற்றும் பலர் நடித்துள்ளனர். 

இந்த படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் கூறியுள்ள விமர்சனத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

ரசிகர் ஒருவர் போட்டுள்ள பதிவில், "வடக்குப்பட்டி ராமசாமி - டி.டி.ரிட்டர்ன்ஸ் போன்று அதிக ரசிகர்களை கவர்ந்துள்ளது. ஓடிடி ஆடியன்ஸ் இருப்பதால்... திரையரங்கிற்கு எதிர்பார்த்த கூட்டம் வருவது சந்தேகம் என கூறியுள்ளார்.

Scroll to load tweet…

மற்றொரு ரசிகர், இந்த ஆண்டில் சந்தானத்திற்கு இது முதல் பிளாக் பஸ்டர் படமாக மாறியுள்ளது. முழுக்க முழுக்க காமெடி மற்றும் பொழுது போக்கு திரைப்படம். குடும்பத்தினர், நண்பர்கள், குழந்தைகள் என னைஅவரையும் லாஜிக் இல்லாத காமெடியால் சிரிக்க வைத்துள்ளது. 'வடக்குப்பட்டி ராமசாமி' படத்தின் முதல் பாதி கேரக்டர் அறிமுகம். இரண்டாம் பாதி நெருப்பாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

'வானத்தைப் போல' சீரியல் நடிகர் தமன் ஹீரோவாக நடித்துள்ள 'ஒரு நொடி' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

Scroll to load tweet…

பாசிட்டிவ் விமர்சனந்த்தை பெற்று வரும் இந்த படம் குறித்து விமர்சித்துள்ள மற்றொரு ரசிகர்... "படத்தோட கதை என்னன்னா வடக்குபட்டி கிராமத்தில் சந்தானத்திற்கு சொந்தமான நிலத்தில் அம்மன் கோவில் கட்டி மூட நம்பிக்கை மூலம் ஊர் மக்களை ஏமாற்றி பணம் சம்பாதித்து வருகிறார் சந்தானம் ராமசாமி. இதை தெரிந்து கொள்ளும் ஊர் தாசில்தார், கோவில் வருமானத்தில் பங்கு கேட்க அதனை ராமசாமி தர மறுக்கிறார். இதனால் ஊரில் இரண்டு குடும்பங்களை மோத விட்டு கோவிலை இழுத்து மூடி விடுகிறார் தாசில்தார். கோவிலை மீண்டும் திறக்க ராமசாமி செய்யும் தில்லு முல்லு வேலைகள்தான் இந்த வடக்கு பட்டி ராமசாமி படத்தோட மொத்த கதையே. படத்தின் முதல் பாதி ஓரளவு நல்ல போனாலும்,இரண்டாம் பாதி ரொம்பவே நல்ல இருந்திச்சி.ஒரு காமெடிக்காக சிரிக்கும் போதே அடுத்த காமெடி வந்து சிரிக்க வைத்து விடுகிறது. மொத்தத்தில் இந்த படம்,எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் ஃபேமிலி ஓட தியேட்டரில் பாக்க வேண்டிய முழு நீள காமெடி படம். என தெரிவித்துள்ளார்.

வாகை சூடு விஜய்! தளபதியின் அரசியல் வருகை குறித்து... பெருமிதத்தோடு அவரின் அம்மா ஷோபா பகிர்ந்த தகவல்!

Scroll to load tweet…

அதே போல் வடக்குப்பட்டி ராமசாமி படம் குறித்து விமர்சித்துள்ள மற்றொரு ரசிகர், முதல் பாதி மோசம், இரண்டாவது பாதி முழுக்க காமெடி. அனைத்து நடிகர்களுடன் தங்களுடைய நடிப்பை நீட்டாக செய்துள்ளனர். சந்தானம் மற்றும் அவருடைய கேங் சிறப்பாக இருந்தது. புது விதமான காமெடிகள் இருந்த போதும், சில மொக்க காமெடிகளும் இருந்தது. மொத்தத்தில் என்டர்டெயினிங் படம் என தெரிவித்துள்ளார்.

Scroll to load tweet…

இப்படம் குறித்து கூறியுள்ள ரசிகர் ஒருவர், "வடக்குப்பட்டி ராமசாமி ஒரு அருமையான நகைச்சுவை பொழுதுபோக்கை வழங்கும் படமாக உள்ளது! சமீப காலங்களில் #சந்தானத்தின் சிறந்த படங்களில் இதுவும் ஒன்று. சந்தானத்தின் சிறந்த காமெடி காட்சிகளை இப்படம் நினைவு படுத்துகிறது இதுவே என விமர்சனம் என கூறியுள்ளார்.

Scroll to load tweet…

வடக்குப்பட்டி ராமசாமி படம் குறித்து தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ள ரசிகர் ஒருவர், "சந்தானம் படம் ன கண்டிப்பா காமெடி இருக்குன்னு எதிர்பார்த்து போனேன். ஆனா காமெடியுடன் கருத்தும் இருக்கு. இதுவரைக்கும் இவர் நடித்த படத்திலே ye இந்த படம் மிகச் சிறப்பு. நம்பி போங்க சந்தோஷமா வாங்க. அனைத்து கதாபாத்திரமும் மிகச் சிறப்பு என தெரிவித்துள்ளார்.

Scroll to load tweet…

மொத்தத்தில் இந்த வாரம் காமெடி சரவெடியாக வெளியாகி டிடி ரிட்டர்ன்ஸ் படத்திற்கு பின்னர், அதுவும் இந்த வருடத்தின் துவக்கத்திலேயே சந்தானத்திற்கு இப்படம் கை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.