டான்ஸ் மாஸ்டர் சாண்டி:

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'மானாட மயிலாட' நிகழ்ச்சியின் மூலம் நடன அமைப்பாளராக தன்னை ரசிகர்களுக்கு மத்தியில், அறிமுகப்படுத்தி கொண்டவர் சாண்டி.

இவர் நடனம் அமைத்த பாடல்கள் இன்று வரை ரசிகர்களால் மறக்க முடியாத அளவுக்கு மிகவும் வித்தியாசமாகவும், தனித்துவமாகவும் அமைத்து, பல முறை கலா மாஸ்டரிடம் பாராட்டை பெற்றவர்.

திரைப்பட நடன இயக்குனர்:

மெல்ல மெல்ல வளர்ந்து வந்த சாண்டி தற்போது பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு நடனம் அமைக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார். அதே போல் விஜய் டிவியில் டான்ஸ் ஷோ ஒன்றில் நடுவராகவும் இருந்து வருகிறார்.

பிக்பாஸ் வாய்ப்பு:

இந்நிலையில் கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடினர். இவரின் கலகலப்பான பேச்சு ஒட்டு மொத்த மக்களையும் கவர்ந்தது. அதே போல் இவர் ஒவ்வொருவருக்காகவும் எழுதி பாடிய பாடல்கள் ஹை லைட் என்று சொல்லலாம்.

விழிப்புணர்வு பாடல்:

கொரோனா விழிப்புணர்வு பற்றி அணைத்து பிரபலங்களும் மக்களுக்கு எடுத்து கூறி வரும் நிலையில், தற்போது சாண்டியும் மிகவும் வித்தியாசமாக விழிப்புணர்வு செய்துள்ளார். பச்சை கறிய பச்சையா தின்னா அதுக்கு பேரு கொரோனா என்றும், மக்கள் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் அதே போல் அரசாங்கத்தின் பேச்சை கேட்டு வீட்டில் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என இந்த பாடலின் மூலம் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். இதில் ஒரு சில சீன்களில் அவருடைய மகளும் இடப்பெற்றுள்ளார்.

இந்த பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ இதோ..