இன்றைய முதல் புரோமோவில்,  ரியோ மற்றும் ஆஜித் உரையாடல் நடைபெற்றதை பார்த்தோம். இதில் ’இந்த வீட்டில் எல்லாமே தந்திரம், எல்லாமே ஸ்டேட்டர்ஜி என்று கூறுவது யார்? என்று ரியோ ஆஜித்திடம் கேட்க அதற்கு பாலாஜி என்று பளீச் பதில் வருகிறது ஆஜித்திடம் இருந்து.

மேலும் செய்திகள்: எதிர்பாராத அன்பை ஏற்றுக் கொள்வதில் என்ன தவறு? தெளிவான கேள்வியால் தெறிக்கவிட்ட ரியோ..!
 

பின்னர் சனம், அனிதா ஆகிய இருவரும் எல்லாத்தையுமே கேம் ஆகத்தான் பார்ப்பேன் என்று கூறிக்கொண்டே அவங்க ரெண்டு பேரும் நண்பர்கள் என்று சொல்லும்போது அதில் ஒரு அன்பு அழகாக இருக்கிறதே’ என்று ரியோ மீண்டும் கேள்வி எழுப்புகிறார். அப்போது ரம்யா ’பாலாகிட்ட கேட்க வேண்டியது எல்லாம் ஆஜித் கிட்ட கேட்டுக் கொண்டிருக்கிறார்’ என்று கலாய்க்கும் காட்சிகளும் இடம்பெற்றது பார்த்தோம்.

ரியோ இப்படி பேசியத்திற்கு தான், அனிதாவும் - சனம் ஷெட்டியும் வரிந்து கட்டிக்கொண்டு வந்து ரியோவிடம் சண்டை போடுகிறார்கள். இதுகுறித்த ப்ரோமோ தான் தற்போது வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்: “இனி இப்படியே டிரஸ் போடு ராசாத்தி”... ‘குட்டி’ நயன் அனிகாவின் போட்டோஸைப் பார்த்து குதூகலமான ரசிகர்கள்...!
 

இவர்கள் இருவரை பற்றியும் பேசியது தவறு தான் என ரியோ ஒப்புக்கொண்ட போதிலும், பிரச்சனை என்று வந்தால்... தொண்டை கிழிய பேசும் சனம், யார் கவனமாக பேச வேண்டும் நீங்களா? அல்ல நானா? என கேட்கிறார். பின்னர் ரியோ கேமரா முன் வந்து பிக்பாஸ் மக்களிடம் சொல்லி விடுங்கள் நான் ரொம்பா தப்பா பேசிவிட்டேன் அனிதாவையும் சனத்தையும் என கூறுகிறார்.

இவரின் இந்த பேச்சுக்கு பின், அமைதியாகவே இருந்த அனிதா, என்னை மாதிரியே அனிதா, என்னை மாதிரியே சனமும் தப்ப நினைச்சிட்டாங்க என்று கூற சொல்கிறார். இதை கேமரா முன் கலாய்த்தபடி ரியோ பேசிக்கொண்டிருக்கும் போது, தேவையே இல்லாமல் சனம் மீண்டும் பேச நீ கேட்டதுக்கு அதிகமாகவே நான் பதில் சொல்லிவிட்டேன் ஓடிவிடு என இருவரையும் ரியோ துரத்தி விடும் காட்சி பார்ப்பதற்கே கொஞ்சம் காமெடியாக தான் உள்ளது.

மேலும் செய்திகள்: பிக்பாஸ் சம்யுக்தா இந்த விஜய் டிவி பிரபலத்தின் நெருங்கிய தோழியா? ஆதாரத்தோடு வெளியான புகைப்படங்கள்..!
 

இது குறித்த புரோமோ இதோ...