பிக்பாஸ் வீட்டில் விறுவிறுப்பாக நடந்து வரும் கால்சென்டர் டாஸ்கில், இதுவரை பாலாஜி-அர்ச்சனா, சனம்-சம்யுக்தா, ரம்யா-ஜித்தன் ரமேஷ் மற்றும் கேபி-சோம் ஆகியோர்களின் உரையாடல் நடந்துள்ளது. இதில் கேபி மட்டும் சோமுக்கு விட்டு கொடுத்து விளையாடியதையும் பார்க்கமுடிந்தது. இது பிக்பாஸ் பிரபலங்கள் மத்தியில் விவாதத்தையும் நேற்றைய தினம் ஏற்படுத்தியதை பார்த்தோம்.

இதை தொடர்ந்து இன்று வெளியாகியுள்ள முதல் புரோமோவில்,  ரியோ மற்றும் ஆஜித் உரையாடல் நடைபெறுகிறது. இதில் ’இந்த வீட்டில் எல்லாமே தந்திரம், எல்லாமே ஸ்டேட்டர்ஜி என்று கூறுவது யார்? என்று ரியோ ஆஜித்திடம் கேட்க அதற்கு பாலாஜி என்று பளீச் பதில் வருகிறது ஆஜித்திடம் இருந்து.

பின்னர் சனம், அனிதா ஆகிய இருவரும் எல்லாத்தையுமே கேம் ஆகத்தான் பார்ப்பேன் என்று கூறிக்கொண்டே அவங்க ரெண்டு பேரும் நண்பர்கள் என்று சொல்லும்போது அதில் ஒரு அன்பு அழகாக இருக்கிறதே’ என்று ரியோ மீண்டும் கேள்வி எழுப்புகிறார். அப்போது ரம்யா ’பாலாகிட்ட கேட்க வேண்டியது எல்லாம் ஆஜித் கிட்ட கேட்டுக் கொண்டிருக்கிறார்’ என்று கலாய்க்கும் காட்சிகளும் உள்ளது.

மேலும் உங்கள் மேல் வைக்கும் அன்பு ஏன் போலியானதாக இருக்கக் கூடாது என்று அஜித்திடம் கேட்கும் ரியோ, ‘உங்களுக்கு எதிர்பாராமல் அன்பு கிடைக்கிறது, அதை ஏற்றுக் கொள்கிறீர்கள், எதிர்பாராமல் கிடைக்கும் அன்பை ஏற்றுக் கொள்வதில் என்ன தவறு? என்று கேட்கிறார். மேலும் இந்த வீட்டில் அன்பை எதிர்பார்ப்பது தப்பா? என்று கேள்வி எழுப்புகிறார், ரியோவின் இந்த தெளிவான கேள்விகளால் அவர் மனதில் உள்ள பல குமுறல்கள் வெளியாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.