- Home
- Cinema
- தொலைக்காட்சி
- கதிர் - ஞானம் இடையே சண்டையை மூட்டிவிட்ட அறிவுக்கரசி.. பிரியும் ஆதி குணசேகரன் ஃபேமிலி - எதிர்நீச்சல் தொடர்கிறது
கதிர் - ஞானம் இடையே சண்டையை மூட்டிவிட்ட அறிவுக்கரசி.. பிரியும் ஆதி குணசேகரன் ஃபேமிலி - எதிர்நீச்சல் தொடர்கிறது
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அண்ணன் - தம்பிகளான ஞானம் மற்றும் கதிர் இடையே அறிவுக்கரசி சண்டையை மூட்டிவிட்ட நிலையில், அதன்பின்னர் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

Ethirneechal Thodargiradhu Serial Today Episode
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி தொடங்க இருக்கும் தமிழ் சோறு என்கிற ஃபுட் டிரக் பிசினஸை தடுக்க ஆதி குணசேகரன் பல்வேறு வழிகளில் முயற்சித்து வருகிறார். நேற்றைய எபிசோடில் கூட, ஜனனி வாடகைக்கு வாங்கி இருக்கும் ஃபுட் டிரக்கின் ஓனரை மிரட்டி, அவரை அந்த ஃபுட் டிரக்கை அங்கிருந்து எடுத்து வரச் சொல்லி இருந்தார். இதையடுத்து அந்த நபரும் ஃபுட் டிரக்கை திரும்ப எடுக்க வந்தார். பின்னர் அவரின் மனைவி வந்து குணசேகரன் மிரட்டிய விஷயத்தை சொன்னதோடு, இனி அந்த ஃபுட் டிரக்கை எடுத்த அவ்வளவுதான் என தன்னுடைய கணவரையே மிரட்டி அழைத்து சென்றார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
கொளுத்திப்போட்ட அறிவுக்கரசி
சில தினங்களுக்கு முன்னர் அறிவுக்கரசி, கதிருக்கு போன் போட்டு பேசுகையில், உங்கிட்ட இருக்கும் விசுவாசம் கூட உன்னுடைய அண்ணன் ஞானத்துக்கு இல்லை என்றும் தற்போது போலீஸ் வலைவீசி தேடுவது உன்னையும், குணசேகரன் மாமாவையும் மட்டும் தான், ஞானத்தின் மீது எந்த கேஸும் இல்லை. உங்களையெல்லாம் உள்ளே அனுப்பிவிட்டு அவர் ஜாலியா இருக்க போறாரு. அவரை மாதிரி தான் அவரோட பொண்டாட்டி ரேணுகாவும், இங்க ஜனனி கூட நெருக்கமா இருக்க மாதிரி காட்டிக்கிறாங்க. ஞானமும் ரேணுகாவும் வெளியே சண்டை போட்ட மாதிரி இருந்தாலும் உள்ளே ரெண்டு பேருக்கும் இடையே ரகசிய டீலிங் ஓடிக்கொண்டிருக்கிறது என கொளுத்திப்போட்டார்.
ஞானத்துடன் சண்டை போடும் கதிர்
இதனால் கதிருக்கு ஞானத்தின் மீது சந்தேகம் எழுந்தது. பின்னர் குணசேகரனிடமும் இதுபற்றி பேசி இருந்தார். இதனால் ஞானத்துக்கு தெரியாமலேயே இருவரும் முடிவெடுக்கிறார்கள். அதன் ஒரு பகுதியாக சில ரெளடி கும்பல்களை கதிர் தயார் செய்ய, அதைப்பார்த்த ஞானம், போலீஸ் கும்பலிடம் இருந்து தப்பிச்சு தான் நாம இங்க வந்து தங்கிட்டு இருக்கோம். யார்ரா இவங்க என ஞானம் கேட்க, அதெல்லாம் உன்கிட்ட சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என திமிராக பதிலளிக்கிறார் கதிர்.
பின்னர் உள்ளே சென்று ஆதி குணசேகர் முன்னிலையில் வைத்து பேசுகையில் கூட இருந்து எங்க ரெண்டு பேரையும் ஜெயிலுக்கு அனுப்பி வைத்துவிட்டால் மொத்த சொத்தும் உனக்கு வந்திடும், அதான உன்னோட ஐடியா என கதிர் கூற, டேய் தேவையில்லாம பேசிக்கிட்டு இருக்க என எகிறுகிறார் ஞானம்.
ஃபீல் பண்ணும் ஜனனி
மறுபுறம் வீட்டில் நந்தினி மற்றும் ரேணுகாவின் அம்மாக்கள் பணம் மற்றும் பழங்கள் கொண்டு வந்து அவர்கள் தொடங்க இருக்கும் புது பிசினஸுக்கு உதவியாக இருக்கும் என கொடுக்கிறார்கள். அப்போது ஜனனி சங்கடப்படக்கூடாது என்பதற்காக நந்தினி இதையெல்லாம் எடுத்துட்டு போ என சொல்கிறார். அதைக்கேட்ட ஜனனி, எங்க வீட்ல இருந்து யாரும் வரலயேனு நான் ஃபீல் பண்றேன்னு நினைக்குறீங்களா எனக்கு தான் நீங்க எல்லாருமே இருக்கீங்களே என சொல்கிறார். இதையடுத்து என்ன ஆனது? கதிர் - ஞானம் சண்டை முடிவுக்கு வந்ததா? ஜனனி சக்சஸ்ஃபுல்லாக பிசினஸ் தொடங்கினாரா? என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

