மேடையில் சட்டையை கழட்டி... சிக்ஸ் பேக்கை காட்டி பூஜா ஹெக்டேவை மிரள வைத்த சல்மான் கான்! வைரலாகும் வீடியோ!
சல்மான் கான் நடித்துள்ள 'கிசி கா பாய் கிசி கி ஜான்' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில்... தன்னுடைய சட்டையை கழட்டி ரசிகர்களை மட்டும் அல்ல பக்கத்தில் நின்று கொண்டிருந்த நடிகை பூஜா ஹெக்டேவையும் மிரள வைத்துள்ளார் சல்மான் கான். இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழில், இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் - தமன்னா நடிப்பில் கடந்த 2014 வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற, 'வீரம்' படத்தின் இந்தி ரீமேக்காக உருவாகியுள்ளது, 'கிசி கா பாய் கிசி கி ஜான்' திரைப்படம். ஃபேமிலி ஆடியன்ஸ் மற்றும் அஜித் ரசிகர்களை சேடிஸ்பை செய்யும் விதத்தில், காமெடி, காதல், ஆக்ஷன் என அனைத்தையும் படத்தில் திகட்டாத அளவில் சேர்த்து ஹிட் கொடுத்தார் சிவா. இந்த படம் ஏற்கனவே தெலுங்கில் ரிமேக் செய்யப்பட்டு, வெற்றி பெற்றதை தொடர்ந்து... தற்போது ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
அஜித் நடித்திருந்த கதாபாத்திரத்தில் சல்மான் கான் நடிக்க, பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படம், ஏப்ரல் 21 ஆம் தேதி, ரிலீஸ் ஆக உள்ள நிலையில்... படத்தின் புரோமோஷன் பணிகள் படு தூளாக நடந்து வருகிறது. முன்னதாக இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா, மும்பையில் படு பிரமாண்டமாக நடந்தது. இதில் நடிகர் சல்மான் கான், நாயகி பூஜா ஹெக்டே உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருமே கலந்து கொண்டனர். இந்த ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சல்மான் கானிடம், அவரது பைசெப்ஸ் மற்றும் சிக்ஸ் பேக்கை காட்ட வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து, சல்மான் கான் மேடையில் அனைவரின் இருந்தபடி தன்னுடைய சட்டையை கழட்டி ரியல் சிக்ஸ் பேக்கை காட்ட, இதை பார்த்து ரசிகர்கள் மட்டும் இன்றி, பக்கத்தில் இருந்த பூஜா ஹெக்டேவும் வாவ்... என கூறி மிரண்டு விட்டார்.
போரா வெடிய... 'சூர்யா 42' படத்தின் டைட்டில் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு..!
மேலும் சல்மான் கான் நடித்துள்ள 'கிசி கா பாய் கிசி கி ஜான்' டிரெய்லர், வெளியாகி பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தாலும், வீரம் படத்தை இப்படி கொத்து பரோட்டா போட்டு வச்சிருக்கீங்களே என, தாறு மாறாக கோலிவுட் ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள். குறிப்பாக அஜித் ரசிகர்களின் ஆதங்கம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது... வீரம் படத்தின் ரீமேக் ட்ரைலரா என பார்பவர்களையே யோசிக்க வைக்கும் அளவில் இருந்தால் வராத கோபம் பின்ன..
மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில், ஜெகபதி பாபு, பூமிகா சாவ்லா, ராகவ் ஜூயல், சித்தார்த் நிகம், ஜாஸ்ஸி கில், வினாலி பட்நாகர் நடித்துள்ளனர். கிசி கா பாய் கிசி கி ஜான் படத்தை ஃபர்ஹாத் சம்ஜி இயக்கி உள்ளார்.