போரா வெடிய... 'சூர்யா 42' படத்தின் டைட்டில் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு..!
'சூர்யா 42 ' படத்தின் டைட்டில் ரிலீஸ் குறித்த தேதியை, தற்போது படக்குழு அதிகாரபூர்வமாக புதிய போஸ்டருடன் அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் தல அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் என பெயர் எடுத்தவர் சிறுத்தை சிவா, அஜித்தை வைத்து வீரம், விஸ்வாசம், வேதாளம், விவேகம், என நான்கு படங்களை இயக்கிய சிறுத்தை சிவா கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து 'அண்ணாத்த' படத்தை இயக்கியிருந்தார். இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை என்றாலும், ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றது.
இந்த படத்தை தொடர்ந்து, தற்போது சிறுத்தை சிவா நடிகர் சூர்யாவை வைத்து இயக்கி வரும் படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 42 என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில், சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே ஞானவேல்ராஜா மிகப் பிரமாண்டமாக தயாரித்து வருகிறார்.
இதுவரை சூர்யா நடித்ததிலேயே அதிகமான பட்ஜெட்டில் இப்படம் உருவாகி வருகிறது. வரலாற்று கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இப்படம், சூட்டிங் முடிவதற்கு முன்பாகவே 500 கோடி ரூபாய்க்கு பிசினஸ் ஆகி உள்ளதாக பல பிரபலங்கள் பேட்டியின் மூலம் உறுதிப்படுத்தி உள்ளனர். மேலும் இந்த படத்தை 3டியில் படமாக்கி வருகின்றனர். ஃபேண்டஸி கதிகம்சம் கொண்ட இப்படத்தை, சுமார் பத்து மொழிகளில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர்.
மேலும் இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு கைப்பற்றி உள்ள நிலையில், ஆடியோ உரிமையையும் பிரபல நிறுவனம் சுமார் 10 கோடிக்கு கைப்பற்றியுள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும்.. இந்த படத்தின் டைட்டில் குறித்த தகவல் அவ்வபோது சமூக வலைதளத்தில் வெளியாகி வந்த நிலையில், இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவலை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி சூர்யா 42 படத்தின் டைட்டில், ஏப்ரல் 16ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த தகவல் சூர்யா ரசிகர்களை உச்சகட்ட மகிழ்ச்சிகள் ஆழ்த்தியுள்ளது.