கொரோனா பாதிப்பு காரணமாக ஏப்ரல் 14ம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பாலிவுட் முதல் கோலிவுட் வரை சகல விதமான ப்டப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பெப்சியில் பதிவு செய்துள்ள 25 ஆயிரம் தொழிலாளர்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒரு வேலை சாப்பாட்டிற்கு கூட உணவு இன்றி கஷ்டப்படுவதாக அச்சங்கத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். 

இதையும் படிங்க: ஆபாச வீடியோ?... முதல் முறையாக மனம் திறந்த பிக்பாஸ் லாஸ்லியா...!

அதில் சாப்பாட்டிற்கு கஷ்டப்பட்டும் திரைப்பட தொழிலாளர்களுக்கு ஒரு மூட்டை அரிசியாவது கொடுத்து உதவினால் அவர்கள் கஞ்சி சோறாவது சாப்பிட்டு உயிர் பிழைப்பார்கள். எனவே திரைப்பட தயாரிப்பாளர்கள், நடிகர், நடிகைகள் தங்களால் ஆன உதவிகளை வழங்க வேண்டுமென கோரிக்கைவிடுத்திருந்தார். இதுவரை ரஜினி, கமல், சிவகார்த்திகேயன், சூர்யா, பிரகாஷ் ராஜ், தயாரிப்பாளர் தாணு, நயன்தாரா என ஏராளமானோர் வாரிக்கொடுத்தும் 2 கோடியை தாண்டியதாக தெரியவில்லை. 

ஆனால் தெலுங்கு திரையுலகில் உள்ள தொழிலாளர்களுக்காக களத்தில் இறங்கிய மெகா ஸ்டார் சிரஞ்சீவி குறுகிய காலத்திலேயே ரூ.6.2 கோடி வரை நிதி வசூல் செய்துள்ளார். இன்னமும் அங்கு திரைப்பிரபலங்கள் நிதியை வாரி வழங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இதையும் படிங்க: கணவரை பக்கத்தில் வைத்துக் கொண்டே... ஜெயம் ரவி, அல்லு அர்ஜூனுக்கு சவால் விட்ட ஸ்ரேயா... வைரலாகும் வீடியோ...!

பட்ஜெட், பிரம்மாண்டம், நடிகர், நடிகைகளின் சம்பளம் என அனைத்திலும் ஒட்டு மொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும் பாலிவுட்டும் தங்களுடன் பணியாற்றும் தொழிலாளர்களுக்காக எண்ணற்ற உதவிகளை வாரி வழங்கி வருகிறது. முதலில் இந்தி சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன், ஒரு லட்சம் சினிமா தொழிலாளர்களுக்கு  ஒரு மாதத்திற்கு தேவையான கோதுமை மற்றும் மளிகை பொருட்களை வழங்க ஏற்பாடு செய்துள்ளார். 

இதையும் படிங்க: கொரோனா கோர தாண்டவத்தில்... விஜய், அஜித் ரசிகர்கள் பார்த்த தேவையில்லாத வேலை...!

இந்தி நடிகர் சல்மான் கான் அங்குள்ள 5 லட்சம் உறுப்பினர்களில் 25 ஆயிரம் பேருக்கு உதவ முன்வந்துள்ளார். அதன் முதற்கட்டமாக கொரோனா ஊரடங்கு முன்பு தான் நடித்து வந்த ராதே படத்தில் பணியாற்றிய லைட்மேன், கேமராமேன் உதவியாளர்கள், டிரைவர்கள், சமையல்காரர்கள், செட் அமைப்பாளர்கள் ஆகியோரது வங்கி கணக்கில் குறிப்பிட்ட தொகையை சல்மான் கான் செலுத்தியுள்ளாராம்.