திரைப்பட தொழிலாளர்களுக்கு ஒரு வேலை கஞ்சி சோறாவது கொடுத்து உதவுங்கள் என்று பெப்சி வைத்த கோரிக்கைக்கு சற்றும் செவி சாய்க்காமல் இருக்கும் தல, தளபதியை கேள்வி கேட்காமல், இப்படி இக்கட்டான நிலையிலும் ட்விட்டரில் கட்டிப்புரளும் விஜய், அஜித் ரசிகர்களை நெட்டிசன்கள் கழுவி ஊத்தி வருகின்றனர். 

ஏப்ரல் 14ம் தேதி வரை இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அமைப்பு சாரா தொழிலாளர்கள் பலரும் ஒரு வேலை சாப்பாட்டிற்கே திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. கோடிகளில் புரளும் துறை என்றாலும் சினிமாவில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தினக்கூலி தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒரு வேலை சோற்றிற்கு கூட திண்டாடுவதாக கூறி பிரபலங்களிடம் பெப்சி அமைப்பு உதவி கோரியிருந்தது. 

அதற்கு சிவகார்த்திகேயன், சூர்யா, ஜெயம் ரவி போன்ற இளம் ஹீரோக்கள் உதவிக்கரம் நீட்டினாலும், தமிழகத்தின் முன்னணி ஹீரோக்களான விஜய், அஜித் ஒரு ரூபாய் கூட நிதியாக கொடுக்காதது கடும் விமர்சனங்களை கிளப்பியுள்ளது. கொரோனா பீதி ஒருபுறம், வாழ்வாதாரம் மறுபுறம் என மக்கள் குழப்பி தவிக்கும் இந்த நேரத்தில்,தல, தளபதி ரசிகர்கள் ட்விட்டரில் பார்த்த வேண்டாத வேலை அனைவரையும் கடுப்பாக்கியுள்ளது. 

Scroll to load tweet…

இதையும் படிங்க: ஆபாச வீடியோ?... முதல் முறையாக மனம் திறந்த பிக்பாஸ் லாஸ்லியா...!

விஷ்ணு வர்தன் இயக்கத்தில் அஜித், நயன்தாரா, டாப்ஸி, ஆர்யா உள்ளிட்டோர் நடித்த ஆரம்பம் திரைப்படம் நேற்று ஜெயா டி.வியில் ஒளிபரப்பாகியுள்ளது. இதையடுத்து #Arrambam என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி, தல ரசிகர்கள் அதை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்தனர். அஜித்தின் மாஸ் போட்டோஸ், டைலாக் ஆகியவற்றை வைத்து ட்வீட் செய்து வந்தனர். 

Scroll to load tweet…

அதற்கு போட்டியாக களத்தில் இறங்கிய விஜய் ரசிகர்களோ ஜீ தமிழில் மெர்சல், சூர்யா டி.வி.யில் தெறி, சன் டி.வியில் திருப்பாச்சி ஆகிய படங்கல் ஒளிப்பரப்பானதை குறிக்கும் விதமாக மீம்ஸ் மற்றும் ஹேஷ்டேக்குகளை உருவாக்கி ட்விட்டரை திணறடித்தனர். அதில் #Mersal ஹேஷ்டேக் ஏகபோகமாக ட்ரெண்டானது. 

Scroll to load tweet…

இதையும் படிங்க: அந்தரத்தில் தொங்கும் ஜாக்கெட்...ரகசிய இடத்தில் ஹாட் டாட்டூ...ஊரடங்கிலும் ஓவர் அலப்பறை செய்யும் யாஷிகா ஆனந்த்!

திரைப்பட தொழிலாளர்களுக்கு ஒரு வேலை கஞ்சி சோறாவது கொடுத்து உதவுங்கள் என்று பெப்சி வைத்த கோரிக்கைக்கு சற்றும் செவி சாய்க்காமல் இருக்கும் தல, தளபதியை கேள்வி கேட்காமல், இப்படி இக்கட்டான நிலையிலும் ட்விட்டரில் கட்டிப்புரளும் விஜய், அஜித் ரசிகர்களை நெட்டிசன்கள் கழுவி ஊத்தி வருகின்றனர்.