ஆபாச வீடியோ?... முதல் முறையாக மனம் திறந்த பிக்பாஸ் லாஸ்லியா...!
லாஸ்லியாவின் ஆபாச வீடியோ என்ற பெயரில் வதந்தி பரப்புவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவர் பதிவிட்டுள்ள இந்த பதிவு வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இலங்கை பெண்ணான லாஸ்லியாவிற்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். எப்போ லாஸ்லியாவை வெள்ளித்திரையில் பார்க்கப்போறோம் என்று காத்திருந்த ஆர்மிக்கு, ஸ்வீட் கொடுத்தது போன்று வெளியானது அந்த செய்தி. ஆம்...லாஸ்லியா ஆரியுடன் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.
இதையும் படிங்க: சிம்ரனுக்கு அடுத்து த்ரிஷா... குட்டை டவுசரில் கெட்ட ஆட்டம் போட்டு டிக்-டாக்...!
இவ்வளவு ஏன் பிரபல நாளிதழில், மக்களிடையே அதிக பிரபலம் அடைந்தவர்கள் யார் என்று கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதில் கூட லாஸ்லியா இரண்டாவது இடம் பிடித்துள்ளார். தற்போது இலங்கையில் தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருந்து வரும் லாஸ்லியா அவர்களின் ஆபாச வீடியோ என்று ஒன்று ரிலீசாகி விஜய் அஜித் பட டிரெய்லர் அளவிற்கு வைரலானது. இந்த தகவலை கேள்விப்பட்டு மனம் நொந்த ஆர்மி ரசிகர்கள், அது போலி வீடியோ என்று தெரிந்த பிறகே அமைதியாகினர்.
இதையும் படிங்க: சரிந்தது “பாகுபலி”யின் பிரம்மாண்ட சாம்ராஜ்யம்... காத்திருந்து வச்சி செஞ்ச தெலுங்கு சூப்பர் ஸ்டார்...!
இதுவரை அந்த வீடியோ விவகாரம் குறித்து மனம் திறக்காத லாஸ்லியா, தற்போது மனதில் தோன்றியதை எல்லாம் கொட்டியுள்ளார். லாஸ்லியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,“பொய்கள் நிறைந்த உலகில் வாழ்கிறோம். அனைவரது வாழ்விலும் சில பிரகாசமான விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் ஒரு கட்டத்தில் நமக்கு உள்ளே உள்ள ஆன்மாவுடன் மட்டுமே தனித்து இருக்கிறோம் என்பதை உணர்ந்துகொள்கிறோம். உலகம் பயம் மற்றும் எதிர்மறை எண்ணங்களால் நிறைந்துள்ளது. மக்கள் மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும் மாற வேண்டும் என்றே நான் நினைக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
லாஸ்லியாவின் ஆபாச வீடியோ என்ற பெயரில் வதந்தி பரப்புவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவர் பதிவிட்டுள்ள இந்த பதிவு வைரலாகி வருகிறது. இத்துடன் தனது க்யூட்டான புகைப்படம் ஒன்றையும் லாஸ்லியா பதிவிட்டுள்ளார். அதுவும் தாறுமாறாக லைக்குகளை குவித்து வருகிறது.