MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சினேகனுக்கு ஏற்ற சரிபாதி! ஓவியம் முதல் சிலம்பம் வரை - சாதனைகளால் மிரட்டும் கன்னிகா சினேகன்!

சினேகனுக்கு ஏற்ற சரிபாதி! ஓவியம் முதல் சிலம்பம் வரை - சாதனைகளால் மிரட்டும் கன்னிகா சினேகன்!

கன்னிகா சினேகன் தன் கணவன் சினேகன் போலவே பல சாதனைகளை படைத்து வருகிறார். ஓவியம், கவி, என்று அனைத்திலும் தன் கணவனுடன் போற்றிப் படுபவர் தான் நம் கன்னிகா. இவர் புரிந்த சாதனைகளை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

3 Min read
Author : Rsiva kumar
Published : Mar 10 2026, 06:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
கன்னிகா ரவி சினேகன் வாழ்க்கை மற்றும் பணி
Image Credit : Asianet News

கன்னிகா ரவி சினேகன் வாழ்க்கை மற்றும் பணி

கன்னிகா சினேகன்: அழகு, திறமை, வசீகரம் என அனைத்திற்கும் சொந்தக்காரிதான் நடிகை கன்னிகா ரவி. பாடலாசிரியர் சினேகனின் மனைவி தான் கன்னிகா ரவி. இவர் அருப்புக்கோட்டை மாவட்டத்தில் 1994 ஆம் ஆண்டு ஜூலை மாதம் எட்டாம் தேதி பிறந்தார். ஏழ்மை குடும்பம்: ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த கன்னிகா ரவியின் அப்பா மளிகை கடையை வைத்து வியாபாரம் செய்துள்ளார். அப்பா மளிகை கடை வைத்து இருப்பதால், கன்னிகாவும் அவ்வப்போது அந்த மளிகை கடையில் பல வேலைகளை செய்து இருக்கிறார். கன்னிகா ரவிக்கு ஒன்றரை வயது இருக்கும்போதே, அம்மா வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றுவிட்டதால், கன்னிகாவை வளர்த்தது சித்தி தான். 

28
பன்முகத்திறமை கொண்ட கன்னிகா சினேகன்
Image Credit : kannikasnekan Instagram

பன்முகத்திறமை கொண்ட கன்னிகா சினேகன்

சிறுவயதிலிருந்தே சித்தி கொடுமையை அனுபவித்து வந்த கன்னிகா, 8 வகுப்பிற்கு பிறகு பள்ளிக்கு போகவில்லை. சித்தியின் கொடுமை தாங்க முடியாமல் வேலைக்கு சென்றதாகவும் கூறியுள்ளார்.‌தினமும் 20 ரூபாய் சம்பளத்திற்கு காட்டிற்கு வேலைக்கு போய் இருக்கிறார். அந்த வேலை மட்டுமில்லாமல், எந்த வேலையாக இருந்தாலும் முகம் சுழிப்பு இல்லாம கன்னிகா செய்து இருக்கிறார். கன்னிகா பார்ப்பதற்கு அழகாக இருந்ததால், நண்பர் ஒருவர் மூலம் கன்னிகாவிற்கு இசை அருவியில், கேளுங்க பசங்களா, ஹாய் குட்டீஸ் போன்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தொகுப்பாளினியாக மட்டுமில்லாமல் நடிகையாக வேண்டும் என்ற ஆசையும் கன்னிகாவிற்கு அப்போது தான் மனதில் தோன்றியதாக கூறியுள்ளார். அதனால் சினிமா துறையில் சென்று பல ஆடிஷன்களில் கலந்து கொண்டார்.

38
சீரியலில் கிடைத்த வாய்ப்பு:
Image Credit : kannikasnekan Instagram

சீரியலில் கிடைத்த வாய்ப்பு:

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய அமுதா ஒரு ஆச்சரிய குறி என்னும் சீரியலுக்கு கே பாலச்சந்திரன் இருந்து ஆடிஷனில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு வந்துள்ளது. அந்த சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் கன்னிகா நடித்திருந்தார். இந்த சீரியல் கலைஞர் தொலைக்காட்சியில் 2012 முதல் 2014 ம் ஆண்டு வரை ஒளிபரப்பானது. இதைத் தொடர்ந்து பாலச்சந்தர் இயக்கத்திலேயே 'சாந்தி நிலையம்'என்ற சீரியலில் நடித்தார். பின், 'கல்யாண வீடு' போன்ற சீரியல்களில் துணை கதாபாத்திரத்திலும், முதன்மை கதாபத்திரத்திலும் நடித்து வந்தார்.

48
நடிகையாக வேண்டும் என்ற ஆசை:
Image Credit : Google

நடிகையாக வேண்டும் என்ற ஆசை:

சீரியல்களில் நடித்து வந்திருந்தாலும் அவருக்கு தமிழ் திரையுலகில் ஒரு நடிகையாக வேண்டும் என்ற ஆசை அவர் மனதுக்குள் வெகுவாகவே இருந்தது. அதன் பிறகு சரித்திரம் பேசு (2015): இது‌ இவரது முதல் படம் என்று சொல்லப்படுகிறது. தேவராட்டம் (2019): கௌதம் கார்த்திக் நடித்த இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இது அவருக்கு நல்ல அடையாளத்தைத் தந்தது. அடுத்த சாட்டை (2019): சமுத்திரக்கனி நடித்த இந்தப் படத்தில் ஒரு மாணவர்களுக்கு வழிகாட்டும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

58
சினேகன் மற்றும் கன்னிகா இடையேயான முதல் சந்திப்பு:
Image Credit : kannikasnekan Instagram

சினேகன் மற்றும் கன்னிகா இடையேயான முதல் சந்திப்பு:

சினேகன் மற்றும் கன்னிகா இடையேயான முதல் சந்திப்பு: ஆடிஷன் நிகழ்ச்சி ஒன்றில், கன்னிகாவை சினேகன் பார்த்து இருக்கிறார். கன்னிகாவின் தலைமுடியை பார்த்த சினேகனுக்கு பார்த்தவுடனே அவர் மீது காதல் வந்துள்ளது. முதல் பார்வையிலேயே காதல் வர அந்த காதலை வெளிப்படையாகவே கன்னிகாவிடம் சொல்லி இருக்கிறார் சினேகன்.2014 ஆம் ஆண்டு கார்த்திகை தீபத்தன்று வீடு முழுவதும் அகல் விளக்குகளை ஏற்றி வைத்துவிட்டு அந்த வெளிச்சத்தில் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார் கன்னிகா.

68
பிக் பாஸ்க்கு பிறகு திருமணம்:
Image Credit : kannikasnekan Instagram

பிக் பாஸ்க்கு பிறகு திருமணம்:

சினேகன் பிக் பாஸ் சீசன் 1 போட்டியாளராக இருந்தார். 100 நாட்கள் வீட்டிலிருந்து முதல் ரன்னராப்பாக வெற்றி பெற்றார். வீட்டை விட்டு வெளியே வந்த சினேகன் கன்னிகா உடன் 8 வருடமாக காதலித்து 2022ம் ஆண்டு கமலஹாசன் தாலி எடுத்துக்கொடுக்க இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு கடந்த ஜனவரி மாதம் அழகான இரட்டை பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைகளுக்கு காதல், கவிதை என அழகான தமிழ் பெயர் வைத்துள்ளார் கமலஹாசன்.

78
கன்னிகாவின் சாதனைகள்:
Image Credit : our own

கன்னிகாவின் சாதனைகள்:

இரட்டை குழந்தைகள் பிறந்ததற்கும் தனது சாதனைகளை தொடர்ந்து வருகிறார் கன்னிகா. 1.ஓவியம்: கன்னிகா ஒரு சிறந்த ஓவியர். குறிப்பாக, தனது கணவர் சினேகனின் முதுகில் அவர் வரையும் தத்ரூபமான ஓவியங்கள் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலம். தூரிகை இன்றி விரல்களாலேயே நுணுக்கமான ஓவியங்களை வரைவதில் அவர் வல்லவர். 

88
Multi-talented Actress Kannika Snekan Biography
Image Credit : our own

Multi-talented Actress Kannika Snekan Biography

2. தற்காப்புக் கலை சிலம்பம்: இவர் தற்காப்புக் கலையான சிலம்பத்தில் மிகுந்த தேர்ச்சி பெற்றவர். பெண்கள் தற்காப்புக்காகப் போராட வேண்டும் என்ற நோக்கில் சிலம்பம் பயின்ற இவர், அது தொடர்பான பல வீடியோக்களைப் பகிர்ந்து இளைஞர்களுக்கு உத்வேகம் அளித்து வருகிறார்.

3.எழுத்துத் துறை: இவர் ஒரு சிறந்த எழுத்தாளரும் கூட. ஆதிரை மற்றும் கன்னிகா புத்தகங்களை எழுதியுள்ளார். சினேகன் ஒரு கவிஞர் என்றால், கன்னிகாவும் இலக்கியத்தின் மீது ஆர்வம் கொண்டவராக விளங்குவது குறிப்பிடத்தக்கது.

4.சமூக வலைதள தாக்கம்: தனித்துவமான வீடியோக்கள், சமையல் குறிப்புகள் மற்றும் பாரம்பரியக் கலைகளை ஊக்குவிப்பதன் மூலம் லட்சக்கணக்கான பின்தொடர்பவர்களைப் பெற்று ஒரு வெற்றிகரமான 'டிஜிட்டல் கிரியேட்டராக' வலம் வருகிறார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ் சினிமா
திரைப்படம்
சினிமா
சினிமா காட்சியகம்
திரைப்பட விமர்சனம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
மருமகன் வீட்டில் டேரா போட்ட மாமியார் காந்திமதி: இது சரியா? தவறா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2!
Recommended image2
விஜய், சங்கீதா, த்ரிஷாவின் தனிப்பட்ட வாழ்க்கை; அத்துமீறி நுழைந்து கருத்து கந்தசாமியாட்டம் கருத்து சொல்லும் பிரபலங்கள்!
Recommended image3
Netflix Top 10 : இந்த வாரம் OTT-ல என்ன பார்க்கலாம்? தெறிக்கவிடும் டாப் 10 படங்களின் லிஸ்ட் இதோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved