கடைசியாக கடவுளை சந்தித்துவிட்டேன்.! நெகிழ்ந்த எஸ்.எஸ் ராஜமௌலி.. யார் தெரியுமா அது.?
ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்றிருந்த ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் விருதை பெற்றுள்ளது. இதற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
கடந்த ஆண்டு வெளியான ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்றிருந்த ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசை அமைத்திருந்தார். இந்த பாடலை தெலுங்கில் சந்திரபோஸ் எழுதி இருந்தார்.
தமிழில் மதன் கார்க்கி எழுதி இருந்தார். ராகுல் மற்றும் கால பைரவா இந்த பாடலை பாடி இருந்தனர். சுமார் 3.36 நிமிடங்கள் ரன் டைம் கொண்ட இந்த பாடலில் ஒவ்வொரு மைக்ரோ நொடியும் பீட்டுகள் அனல் பறக்கும் ரகமாக இருக்கும். அதற்கு ஏற்ற வகையில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் என இருவரும் நடனம் ஆடி இருப்பார்கள்.
இதையும் படிங்க..Pongal 2023: வாடிவாசலில் சீற தயாராகும் காளைகள்! ஜல்லிக்கட்டு போட்டி எந்தெந்த தேதிகளில் எங்கு நடக்கிறது?
கடந்த ஜனவரி 11 ஆம் தேதி ரிஹானா, லேடி காகா மற்றும் டெய்லர் ஸ்விஃப்ட் போன்றவர்களைத் தோற்கடித்து 'சிறந்த அசல் பாடலுக்கான' கோல்டன் குளோப் விருதைப் பெற்று வரலாறு படைத்தது. இந்தியா மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் பாராட்டை பெற்று வருகிறது.இந்த நிலையில் ராஜமௌலி உலகப் புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கை சந்தித்துள்ளார். அவரைப் பார்த்த மகிழ்ச்சியில் ஆச்சரியத்துடன் கன்னத்தில் கை வைத்து அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து ராஜமௌலி வெளியிட்டுள்ள பதிவில், ‘திரைப்படங்களின் கடவுளைச் சந்திக்கும் பாக்கியம் கிடைத்து, அவருடைய காதுகளில் டூயல் உள்ளிட்ட அவரது திரைப்படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் எனக் கூறினேன். மேலும் நாட்டு நாடு பிடிக்கும் என்று அவர் கூறியதை என்னால் நம்பவே முடியவில்லை’ என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க..Pongal 2023 : பொங்கல் தினத்துக்கு இத்தனை நாள் விடுமுறையா? கூடுதலாக 2 நாட்கள் லீவ் கிடைக்குமா?