நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 'மாரி 2' படத்தில் இடம்பெற்ற,  'ரவுடி பேபி' பாடல் இதுவரை 800 மில்லியன் பார்வையாளர்களை பெற்றும், 3 மில்லியன் லைக்குகளை குவித்தும் புதிய  சாதனையை படைத்துள்ளது.  இதனை நடிகர் தனுஷின் ரசிகர்கள், கொரோனா ரணகளத்திலும்... கூட குதூகலமாக கொண்டாடி வருகின்றனர்.

இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில், தனுஷ், சாய்பல்லவி, நடிப்பில் கடந்த 2018 ஆம்  ஆண்டு  வெளியான திரைப்படம் 'மாரி 2'. இதில் நடிகை வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். குறிப்பாக தனுஷ் மற்றும் சாய்பல்லவி நடனமாடிய ரவுடி பேபி பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த பாடலுக்கு பிரபுதேவா நடன பயிற்சி அமைத்திருந்தார். இவர்களின் சூப்பர் காம்போ ... அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து.

அதே போல் மாரி 2 படத்தில் இடம்பெற்றிருந்த மற்ற பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இந்நிலையில் ஏற்கனவே ரவுடி  பேபி பாடல், உலக அளவில் அதிக பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்த நிலையில், தற்போது மேலும் மற்றொரு சாதனையை படைத்துள்ளது.

 அதாவது இதுவரை 800 மில்லியன்  பார்வை பெற்று 3 மில்லியன் லைக்குகளை குறித்தும் இப்பாடல் படைத்துள்ள சாதனையை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ்  தற்போது வெளியிட்டுள்ளது.