கொரோனா வைரஸ் தாக்கம், தமிழகத்தில் கண்டறியப்பட்டதுமே, உடனடியாக அணைத்து மக்கள் ஒன்று கூடும் இடங்களான, திரையரங்கங்கள், கோவில்கள், மற்றும் வெள்ளித்திரை, சின்னத்திரை சார்ந்த பணிகள் முடக்கப்பட்டது.

இதனால் கூலி வேலை செய்து, தங்களுடைய பிழைப்பை நடத்தி வந்த, பல தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். இப்படி பாதிக்க்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும் என, பெப்சி அமைப்பின் மூலமும், நடிகர் சங்கத்தின் மூலமும் கேட்டுக்கொண்டதால், பல பிரபலங்கள் தானாக முன்வந்து பல்வேறு உதவிகளை செய்தனர்.

இந்நிலையில், தங்களுடைய சினிமா பணிகள் சிலவற்றில் தளர்வுகள் கொண்டுவர வேண்டும் என, இயக்குனரும், பெப்சி அமைப்பின் தலைவருமான ஆர்.கே.செல்வமணி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வேண்டுகோள் விடுத்தது கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

மேலும் செய்திகள்: இதை பின்பற்றினால் மட்டுமே தொழில் நிறுவனங்கள் இயக்க அனுமதி! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!
 

இந்த கடிதத்தில் கூறியுள்ளதாவது... "மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களுக்கு...  தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் பணிவான வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

தற்போது ஊரடங்கு சட்டம் போடப்பட்டு, ஏறக்குறைய 50 நாட்களை தொட இருக்கிறோம். கொரோனா வைரஸ் பாதிப்பினை கருதி மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு அறிவிப்பதற்கு. 5 நாட்களுக்கு முன்பே திரைப்படத் துறையின் அனைத்து வேலைகளையும் நிறுத்தி ஏறக்குறைய இன்றோடு 50 ஆவது நாளை கடக்க உள்ளோம். வெற்றிகரமான 100 நாள் வெள்ளி விழா, பொன் விழா என திரைப்பட வெற்றிகளை சந்தோசமாக கொண்டாடிய திரைப்படத்துறை இந்த வேலை முடக்கப்பட்ட 50-ஆவது நாள் என்று அறிவிக்கக் கூடிய துர்ப்பாக்கியமான துன்பமான சூழ்நிலையில் உள்ளோம்.

தமிழ்த்திரைப்பட துறையினர் நலவாரியம் மூலம் ரூபாய் 1000 தமிழ் திரைப்பட கலைஞர்கள் மூலம் பெறப்பட்ட நன்கொடை, வழியாக ரூ. 1500 ரூபாய்க்கான உணவுப் பொருட்களும், அமிதாப்பச்சன்  மூலம் சோனி டிவி மற்றும் கல்யாண் ஜுவல்லரி வழங்கிய ரூபாய் 1500 மதிப்பிலான உணவுப் பொருட்களும் ஏறக்குறைய ரூபாய் 4 ஆயிரம் ரூபாய்க்கான உணவுப் பொருட்களை வைத்து, இந்த 50 நாள் வேலை முடக்கத்தில் இருந்து எங்கள் தொழிலாளர்களை உயிரோடு காப்பாற்றி உள்ளோம்.

மேலும் செய்திகள்: உடலை வளைத்து... நெளித்து... அந்த இடத்தில் உள்ள டாட்டூ தெரிய கவர்ச்சி சூடேற்றும் யாஷிகா! ஹாட் வீடியோ!
 

இனியும் வேலை முடக்கம் நீடிக்கப்பட்டால்,  கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பித்த தொழிலாளர்கள் பசி பட்டினிச் சாவுகளை எதிர்நோக்க வேண்டிய அபாயகரமான சூழ்நிலையில் உள்ளார்கள் என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறோம்.

தற்போது 17 துறைகளுக்கு நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்கி இருப்பதைப்போல், திரைப்படத் துறைக்கும் தொலைக்காட்சிக்கும், நிபந்தனைகளோடு அனுமதி வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்: ஏழை ரசிகரின் வீட்டில் டீ குடித்த அஜித்! தயங்கி நின்றவருக்கு இன்ப அதிர்ச்சி! புகைப்படத்தோடு வெளியிட்ட பிரபலம்!
 

குறைந்தபட்சம் திரைப்படங்களுக்கும் படப்பிடிப்பு அல்லாத பணிகளான ரெக்கார்டிங்,  ரீரெக்கார்டிங், டப்பிங். போன்ற post-production பணிகளுக்கும் தொலைக்காட்சி படப்பிடிப்பிற்கும் அனுமதி வழங்கினால் சம்மேளனத்தின் 40 - 50 சதவீத தொழிலாளர்கள் வேலை செய்யக்கூடிய சூழ்நிலை ஏற்படும் என்பதையும், அவர்கள் பட்டினி சாவில் இருந்து தப்பிக்க முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த பணிகளை சமூக இடைவெளியுடன் பணி செய்ய வைக்க இயலும் என்பதால் திரைப்படங்களுக்கு போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மற்றும் தொலைக்காட்சி பணிகளுக்கான அனுமதி வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

மத்திய மாநில அரசுகள் விதிக்கின்ற அனைத்து கட்டுப்பாடுகளையும் நிபந்தனைகளையும் ஏற்று இந்த பணிகளை சமூக இடைவெளியுடன் மருத்துவ பாதுகாப்புகளுடன் சுகாதாரமான முறையில் செய்வோம் என உறுதி அளிக்கிறோம்.  என பிரபல இயக்குனரும் பெப்சி அமைப்பின் தலைவருமான ஆர்கே செல்வமணி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.