தல அஜித்தின், இந்த வருட பிறந்தநாளை, ஊரடங்கு உத்தரவின் காரணமாக அவருடைய ரசிகர்களால், மிக பிரமாண்டமாக கொண்டாட முடியவில்லை என்றாலும், எளிமையாக கொண்டாடி மகிழ்ந்தனர். 

இந்நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு வீரம் படத்தின் படப்பிடிப்பு நேரத்தில்,  அஜித் வீரம் படத்தில் அவருக்கு தம்பியாக நடித்தவர்களில் ஒருவரான சுஹேலுடன் சுமார் 500 கிலோமீட்டர் பைக் ரெய்டு செய்தது பற்றி தெரிவித்து, அப்போது நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தையும் ரசிகர்களுக்காக பகிர்ந்துள்ளார் சுஹேல்.

இந்த பைக் ரெய்டின் போது, இருவரும் டீ குடிப்பதற்காக ஒரு இடத்தில் நிறுத்தியுள்ளனர். வந்திருப்பது அஜித் தான் என தெரிந்துகொண்ட, அவரின் தீவிர ஏழை ரசிகர் ஒருவர், அவரை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வந்து டீ போட்டு கொடுத்துள்ளனர். மேலும், ஒரு புகைப்படம் எடுத்து கொள்ளலாமா? என கேட்க அவர்கள் தயங்கிய நிலையில் அஜித்தே அவரை அழைத்து புகைப்படம் எடுத்து கொண்டது மட்டும் இன்றி, அந்த புகைப்படத்தை பிரேம் செய்து அந்த ஏழை ரசிகரின் வீட்டுக்கு அனுப்பி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.  

மேலும் செய்திகள் :சூர்யா - ஜோதிகாவின் குலதெய்வ வழிபாடு..! பட்டு பாவாடையில் மகள்... வேஷ்டி சட்டையில் மகன்! வைரலாகும் வீடியோ!

இந்த தகவலை, நடிகரும் புரோ கபடி தொகுப்பாளருமான சுஹேல் குறிப்பிட்ட அந்த புகைப்படத்தை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியதால் மக்கள் அதிகமாக கூட தடை விதிக்கப்பட்டது. தனிமனித விலகலை கடைபிடிக்க வலியுறுத்தி ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்: அசப்பில் நயன்தாரா போலவே இருக்கும்... சின்னத்திரை நயன் வாணி போஜன்..! மேக்அப் இல்லாமல் கூட இவ்வளவு அழகா..?
 

இப்படி திடீரென ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போது தல அஜித், ஐதராபாத்தில் வலிமை பட ஷூட்டிங்கில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது விமான போக்குவரத்து அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டிருந்ததால், உடனடியாக அதிரடி முடிவெடுத்த அஜித் விமான டிக்கெட்டை ரத்து செய்துவிட்டு பைக்கில் புறப்பட திட்டமிட்டுள்ளார். இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் குடும்பத்தை பிரிந்திருக்க விரும்பாத அஜித், 600 கிலோ மீட்டர் தூரத்தை பைக்கிலேயே பயணிந்து வீடு வந்து சேர்ந்ததாக தகவல்கள் சமீபத்தில் வெளியாகியது. ஆனால் அஜித் தரப்பை சேர்த்தவர்கள் இந்த தகவலை மறுத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.