பிரபல நடிகரும், பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மகனுமான சூர்யாவின் குடும்பத்தினர், குலதெய்வ கோவிலில் வழிபாடு செய்த வீடியோ, தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவில், நடிகர் சூர்யாவின் மகள் தியா அடையாளம் தெரியாத அளவிற்கு வளர்ந்து, பட்டு பாவாடையில் இருக்கிறார். சூர்யாவின் செல்ல மகன் தேவ், வேஷ்டி - சட்டை அணிந்துள்ளார். சூர்யா - ஜோதிகா ஆகியோரும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம், ஈரோட்டில் உள்ள குலதெய்வ வழிபாட்டிற்கு சென்றபோது இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்: அசப்பில் நயன்தாரா போலவே இருக்கும்... சின்னத்திரை நயன் வாணி போஜன்..! மேக்அப் இல்லாமல் கூட இவ்வளவு அழகா..?
 

சமீபத்தில், நடிகை ஜோதிகா தஞ்சை கோவில் பற்றி பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது இந்த வீடியோ வெளியாகியுள்ளது. ஜோதிகாவின் தஞ்சை பேச்சுக்கு ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்த போதிலும் மற்றொரு தரப்பினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் சமீபத்தில் இது குறித்து அறிக்கை வெளியிட்ட நடிகர் சூர்யா, கோயில்களைப் போலவே பள்ளிகளையும் மருத்துவ மனைகளையும் உயர்வாக கருத வேண்டும் என்கிற கருத்தை ஜோதிகா வலியுறுத்தியதை சில குற்றமாகப் பார்க்கிறார்கள். இதே கருத்தை விவேகானந்தர் போன்ற ஆன்மிகப் பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். மக்களுக்கு உதவினால் அது கடவுளுக்கே செலுத்தும் காணிக்கை என்பது திருமூலர் காலத்தில் சிந்தனை.  நல்லோர்  சிந்தனைகளை காது கொடுத்து கேட்காதவர்களுக்கு, இது தெரிய வாய்ப்பில்லை.

மேலும் செய்திகள்: இவ்வளவு அருமையா பாடுவாரா ஜனனி ஐயர்! முதல் பாடலே மெர்சல்...வைரலாகும் வீடியோ!
 

பள்ளிகளையும், மருத்துவமனைகளையும், இறைவன் உறையும் இடமாக கருத வேண்டும் என்கிற கருத்தை எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் வரவேற்க செய்கின்றனர். என கோரி ஜோதிகாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மனைவி குடும்பத்துடன் இருக்கும் இதுவரை பார்த்திராத அரிய புகைப்படங்கள்!
 

இந்த நிலையில் தான் ஜோதிகா - குடும்பத்தினர் கடந்த 6 மாதத்திற்கு முன் குலதெய்வ வழிபாடு செய்த வீடியோ இப்போது வெளியாகியுள்ளது.

அந்த வீடியோ இதோ...