பிரபல மாடலும், நடிகையுமான ஜனனி ஐயர் முதல் முதலாக பாடியுள்ள பாடல் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான 'திரு திரு துரு துரு' படத்தின் மூலம், ஒரு சிறு கதாப்பாத்திரத்தில் அறிமுகமானவர் நடிகை ஜனனி ஐயர். இயக்குனர் பாலா இயக்கத்தில் விஷாலுக்கு ஜோடியாக போலீஸ் வேடத்தில் நடித்தது, இவரை கோலிவுட் திரையுலக ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது.

இவர் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடித்த 'தெகிடி' படம் வெற்றிபெற்ற போதிலும், ஜனனிக்கு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

மேலும் செய்திகள்: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மனைவி குடும்பத்துடன் இருக்கும் இதுவரை பார்த்திராத அரிய புகைப்படங்கள்!
 

தமிழை அடுத்து, மலையாள மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் ஜனனி ஐயர். மேலும், விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'பிக்பாஸ்' சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு விளையாடினார்.

பிக்பாஸ் டைட்டில் வின்னராக ஆகக்கூடிய அணைத்து, திறமைகளும் இருந்தும் மக்களிடம் சற்று குறைவாக ஓட்டுகள் பெற்று இறுதி சுற்றில் வெளியேறினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதும், உடனடியாக இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும், தற்போது, 'தொல்லைக்காட்சி', 'வேழம்', மற்றும் 'கசட தபர' ஆகிய மூன்று படங்கள் இவரின் வைவசம் உள்ளது.

மேலும் செய்திகள்: 7ஜி ரெயின்போ காலனி பட நடிகரா இது?... அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிட்டாரே...!
 

இந்நிலையில் தற்போது ஜனனி ஐயர் ‘உன் நெருக்கம்’ என்று ஆரம்பிக்கும் ஒரு பாடலை பாடியுள்ளார். இந்த பாடலை இசையமைப்பாளர் அஸ்வின் விநாயகமூர்த்தி கம்போஸ் செய்துள்ளார். 

அஷ்வினுடன் இணைந்து  நடிகை ஜனனி ஐயரும் பாடியுள்ளார். இந்த பாடலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  ஜனனி ஐயர் பதிவிட, ரசிகர்கள் தங்களுடைய லைக்குகளை குவித்து வருகிறார்கள். மேலும் இவருடைய புதிய திறமையும் தற்போது வெளியாகியுள்ளதாக ரசிகர்கள் கூறிவருகிறார்கள். 

மேலும் செய்திகள்: கோடிகோடியாக கொடுத்தாலும் வேண்டாம்... ரசிகர்களுக்காக 'தளபதி' செய்த தரமான சம்பவம்!
 

இதுகுறித்து தெரிவித்துள்ள ஜனனி ஐயர், முதல்முறையாக என்னால் முடிந்தளவு முயற்சி செய்து பாடியுள்ளேன். இந்த பாடலை பாட எனக்கு ஊக்கம் அளித்த அஸ்வினுக்கு நன்றி. இந்த பாடல் ஸ்கைப் மூலம் ரிக்கார்டிங் செய்யப்பட்டது. இந்த பாடல் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்’ என்ரு கூறியுள்ளார்.

தற்போது வைரலாகி வரும் அந்த பாடல் இதோ...