செல்வராகவன் இயக்கத்தில் ரவி கிருஷ்ணா மற்றும் சோனியா அகர்வால் நடிப்பில் உருவான 7ஜி ரெயின்போ காலனி திரைப்படம் வெளியாகி சுமார் 16 ஆண்டுகள் ஆகிவிட்டன. அந்த படத்தில் நடித்த கதிரும் அனிதாவும் இன்றைக்கும் பலராலும் மறக்க முடியாத காதலர்களாகவே இருக்கின்றனர். அந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் இன்று வரையிலும் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமாக இருக்கிறது. 

செல்வராகவனுக்கு மட்டுமல்ல அந்த படத்தில் நடித்த நிறைய கதாபாத்திரங்களுக்கு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது இந்த படம் தான். ஏன் செல்வராகவன் வாழ்விலும் இந்த படம் மூலமாக தான் காதல் மலர்ந்தது. சோனியா அகர்வாலை செல்வராகவன் இந்த படம் இயக்கும் போதும் தான் காதலிக்க ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. அவர்களது திருமண வாழ்க்கை நிலைக்காமல் போனாலும், 7ஜி ரெயின்போ காலனி திரைப்படம் யார் மனதை விட்டும் அகலவில்லை. 

இந்த படத்தில் முக்கியமான காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சுமன் ஷெட்டி. இந்த படத்தின் மூலம் கிடைத்த புகழால் ஜெயம், படிக்காதவன் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். சிம்புவுடன் குத்து படத்தில் இவர் நடித்த காமெடி காட்சிகள் அனைத்தும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகராக வலம் வந்தார். 

காமெடியனுக்கு என்று அளவு எடுத்த செய்தது போன்று குண்டான, குள்ளமான உடல் தோற்றத்துடன் வந்து அனைவரையும் சிரிக்க வைத்துக்கொண்டிருந்த சுமன் ஷெட்டி. தற்போது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு டக்கராக மாறிவிட்டார். உடல் எடையை குறைத்து பார்ப்பதற்கு ஹீரோ போல் இருக்கும் சுனில் ஷெட்டியின் புகைப்படம் சோசியல் மீடியவில் வைரலாகி வருகிறது.