தன்னுடைய ரசிகர்களுக்காக விஜய் நச்சுனு செய்த ஒரு செயல் தற்போது வெளியாகி, விஜய் ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இயக்குனர் அட்லீ இயக்கத்தில், விஜய் நடித்த 'பிகில்' திரைப்படம், கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற நிலையில், தற்போது,  தளபதி விஜய் இயக்குனர்   லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ’மாஸ்டர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். 

அணைத்து விஜய் ரசிகர்களாலும் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு உள்ளான இந்த திரைப்படம் கடந்த மாதம் ஏப்ரல் 9ம் தேதியே வெளியாக வேண்டிய நிலையில், உலக நாடுகளை அடுத்து இந்திய மக்களையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக, 'மாஸ்டர்' படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்: திடீர் மாரடைப்பால் உயிரிழந்த பிரபல தமிழ் பட இயக்குனர்! கோலிவுட் திரையுலகினர் அதிர்ச்சி!
 

இந்த நிலையில் சிறிய மற்றும் மீடியம் பட்ஜெட் திரைப்படங்கள் ஓடிடி  பிளாட் ஃபாம்மில், வெளியாக உள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. அதே போல், தளபதி நடித்துள்ள, 'மாஸ்டர்' திரைப்படத்தை பிரபல நிறுவனம் ஒன்று ஓடிடி யில் வெளியிட கூறி 'மாஸ்டர்' பட தயாரிப்பாளரை அணுகியதாக ஒரு தகவல் கோலிவுட் திரையுலகில் தீயாய் பரவியது.

இந்நிலையில் இது குறித்து வெளியாகியுள்ள தகவலில், பிரபல நிறுவனம் ஒன்று அணுகியது உண்மைதான் என்றும் மிகப்பெரிய தொகைக்கு ’மாஸ்டர்’ படத்தை வாங்க தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளது.

மேலும் செய்திகள்: திருமணம் ஆன 4 வருடத்தில் விவாகரத்து! விஜய் டிவி சீரியல் நடிகை மேகனா கொடுத்த அதிர்ச்சி..!
 

நடிகர்  விஜய்யிடம் இது குறித்து தயாரிப்பாளர் பேசியபோது, ’எத்தனை கோடி கொடுத்தாலும் முடியவே, முடியாது என்றும், தன்னுடைய படத்தை, ரசிகர்கள் அனைவரும் ஒன்றாய் கூடி சிரித்து சந்தோஷமாய் பார்க்க வேண்டும். நான் படம் நடிப்பதே அவர்களுக்காக தான் என கூறினாராம் விஜய்.

தளபதியின் இந்த சிறப்பான சம்பவத்தால் அவருடைய ரசிகர்கள் இரட்டிப்பு குஷியாகி உள்ளனர்.