கொரோனா வைரஸ் தாக்குதல் இந்தியாவில் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தும் விதமாக, நாளையுடன் முடியவிருந்த ஊரடங்கை, மக்களின் பாதுகாப்பு கருதி மேலும் இரு வாரங்களுக்கு நீடித்துள்ளது மத்திய மற்றும் மாநில அரசுகள்.

இந்த ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக, சொந்த ஊருக்கு செல்லமுடியாமல், தனியாக வீடு எடுத்து வசித்து வந்த கேடயம் பட இயக்குனர், பி.கே.ராஜ்மோகன் என்பர் மாரடைப்பு காரணமாக அவர் தனியாக வசித்து வந்த வீட்டிலேயே இறந்து கிடந்துள்ளார்.

47 வயதாகும் பி.கே.ராஜ்மோகன் கடந்த 2008 ஆண்டு 'அழைப்பிதழ்' என்கிற படத்தை இயக்கி நடித்தார். இந்த படத்தில் நடிகை சோனா, எம்,எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.  

மேலும் செய்திகள்: காதல் தோல்வி... தற்கொலை முயற்சி... திருமணத்தையே வெறுத்த பாக்யராஜ் மகள் சரண்யா! காரணம் யார் தெரியுமா?
 

இந்த படத்தை தொடர்ந்து, புதுமுகங்களை வைத்து 'கேடயம்'  என்ற மற்றொரு திரைப்படத்தை இயக்கியுள்ளார்.  இந்த திரைப்படத்தின் வெளியீடு, மற்றும் மற்ற பணிகளுக்காக  சென்னை கே.கே.நகர் பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார்.

இவர் தினமும்  மதிய உணவுக்காக அவரது நண்பரின் வீட்டிற்கு செல்வது வழக்கம்.  ஆனால்  ஒரு நாள் வீட்டிற்கு வரவில்லை. போன் செய்து பார்த்த போதும், அவர் தரப்பில் இருந்து எந்த பதிலும் இல்லாததால், உடனடியாக  அவரது நண்பர் ராஜ்மோகனின் வீட்டிற்கே நேரடியாக சென்று பார்த்துள்ளார்.

மேலும் செய்திகள்: பிரபாஸ் காதல் வதந்தியில் சிக்கிய பெரிய இடத்து நாயகி நிகாரிக்கா! சட்டை மட்டும் அணிந்து அட்ராசிட்டி போஸ்..!
 

 அப்போது இயக்குனர் பி.கே.ராஜ்மோகன் கீழே சரிந்து விழுந்து, சுயநினைவு அற்று கிடந்துள்ளார். உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார் அவருடைய நண்பர். பி.கே.ராஜ்மோகன் உடலை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே  மாரடைப்பு காரணமாக ராஜ்மோகன்இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

கோலிவுட் பிரபலங்கள் மற்றும் பலருக்கு நன்கு அறிமுகமான இவரின் இந்த திடீர் மறைவு, பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.