Asianet News Tamil

காதல் தோல்வி... தற்கொலை முயற்சி... திருமணத்தையே வெறுத்த பாக்யராஜ் மகள் சரண்யா! காரணம் யார் தெரியுமா?

கோலிவுட் திரையுலகில் '16 வயதினிலே படத்தில், துணை இயக்குனராக அறிமுகமான நடிகர் பாக்யராஜ், பின் நடிகர், இயக்குனர் என வெள்ளித்திரையில் தன்னுடைய திறமையை வளர்த்துக்கொண்டு ஜொலித்தவர். இவரின் பட்டறையில் பாடம் கற்ற பலர் தற்போது முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார்கள். 
 

director bhagyaraj daughter sad life
Author
Chennai, First Published May 2, 2020, 4:33 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

கோலிவுட் திரையுலகில் '16 வயதினிலே படத்தில், துணை இயக்குனராக அறிமுகமான நடிகர் பாக்யராஜ், பின் நடிகர், இயக்குனர் என வெள்ளித்திரையில் தன்னுடைய திறமையை வளர்த்துக்கொண்டு ஜொலித்தவர். இவரின் பட்டறையில் பாடம் கற்ற பலர் தற்போது முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார்கள். 

பாக்யராஜின் தனித்துவமான  படைப்புகளுக்கு தமிழ் மட்டும் இன்றி, ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் பல ரசிகர்கள் உள்ளனர். இப்படி பலராலும் அறியப்பட்ட இவர், வாழ்க்கையிலும் மறைந்திருக்கிறது தீர்க்க முடியாத சோகம்.


நடிகர் பாக்யராஜ் குடும்பத்தை கலைக்குடும்பம் என கூறலாம். இவருடைய மானைவி 80 களில் ரஜினி, கமல் என பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர். 'டார்லிங் டார்லிங்' படப்பிடிப்பின் போது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்து அது திருமணத்தில் முடிந்தது.

மேலும் செய்திகள்: திருமணம் ஆன 4 வருடத்தில் விவாகரத்து! விஜய் டிவி சீரியல் நடிகை மேகனா கொடுத்த அதிர்ச்சி..!
 

இவர்களுக்கு சாந்தனு என்கிற மகனும் சரண்யா என்கிற மகளும் உள்ளார். சாந்தனு குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகம்மாகி தற்போது ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார். சாந்தனுவின் மனைவி கீர்த்தி, பிரபல தொகுப்பாளினி மற்றும் நடன கலைஞர்ராக உள்ளார்.

பாக்கியராஜின் செல்ல  மகள் சரண்யா 'பாரிஜாதம்' படத்தில் நடிகர் பிரித்திவிராஜ்ஜிக்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் வெற்றி பெற்றாலும் தொடர்ந்து சரண்யா படங்களில் நடிக்க விரும்பவில்லை.

மேலும் செய்திகள்: பிரபாஸ் காதல் வதந்தியில் சிக்கிய பெரிய இடத்து நாயகி நிகாரிக்கா! சட்டை மட்டும் அணிந்து அட்ராசிட்டி போஸ்..!
 

பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட நடிகர் பாக்யராஜ். இவருடைய பிள்ளைகள் காதலித்தால் என்ன சொல்ல போகிறார் கண்டிப்பாக பச்சைக்கொடி தான். இந்த தைரியத்தில் ஏற்கனவே அவர் வீட்டில் அரங்கேறியது சந்தனு கீர்த்தி திருமணம். அதே போல் இவருடைய மகள் சரண்யாவும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த இந்தியர் ஒருவரை பல வருடமாக காதலித்து வந்துள்ளார்.

இதற்கு சரண்யாவின் பெற்றோர் சம்மதம் தெரிவித்தாலும், காதலர் தன்னுடைய காதலில் நிலையாக இல்லாமல் போனதால் இவருடைய காதல் தோல்வியடைந்தது.

காதல் தோல்வியில் இருந்து சரண்யா மீள்வதற்கு மிகவும் கஷ்டப்பட்டார். மன அழுத்தத்தாலும் காணப்பட்டார்.  பிரபலத்தின் மகள் ஆடம்பரமான வாழ்க்கை என பலவற்றை சரண்யா பெற்றிருந்தாலும் சாதாரண மனிதனுக்கு உள்ள உணர்சிகளும், மனசும் தானே அவருக்கும் இருக்கும். ஒரு நிலையில் காதல் தோல்வியில் இருந்து மீள முடியாமல் தற்கொலைக்கு முயற்சித்தாராம்.

மேலும் செய்திகள்: 15 வயசு சின்ன பொண்ணுக்கிட்ட இப்படியெல்லாமா பேசுவீங்க?... தாறுமாறாக விமர்சித்தவர்களை விளாசிய அனிகா...!
 

பேர், புகழ் பல இருந்தும் 35 வயதை தொட்ட மகளுக்கு இன்னும் திருமணம் செய்து பார்க்க முடியவில்லை என்கிற கவலையை மனதில் புதைத்துக்கொண்டு. சாதாரணமாக இருப்பது போல் வெளியிலும் காட்டிக்கொள்கின்றனர் இந்த நட்சத்திர தம்பதிகள்.

மேலும் பல முறை இவர்கள் சரண்யாவை திருமணம் செய்துக்கொள்ளும் படி வற்புறுத்தியதால் சரண்யா படிப்பைக் காரணம் கூறி, அமேரிக்கா சென்று விட்டார். தற்போது அமெரிக்காவில் அவர் மனதிற்கு பிடித்த ஒரு படிப்பை தேர்வு செய்து நடித்து படித்து வருகிறாராம்.

Follow Us:
Download App:
  • android
  • ios