விஜய் டிவியில் ஒளிபரப்பான, 'அவளும் நானும்' சீரியல் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர், நடிகை மேகனா வின்சென்ட். இவர் ஏற்கனவே கருத்து வேறுபாடு காரணமாக கணவரிடம் இருந்து பிரிந்து வாழ்த்த நிலையில் தற்போது பரஸ்பரமாக விவாகரத்து பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மேலும் செய்திகள்: பிரபாஸ் காதல் வதந்தியில் சிக்கிய பெரிய இடத்து நாயகி நிகாரிக்கா! சட்டை மட்டும் அணிந்து அட்ராசிட்டி போஸ்..! 

நடிகை மோகனா, ஒரு மாடலாகவும், மலையாள திரைப்படங்களில் சிறிய சிறிய வேடத்தில் நடித்து பிரபலமானவர். தமிழை தவிர, பல மலையாள சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது, இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், 'பொன்மகள் வந்தாள்' சீரியலில் முன்னணி நாயகியாக நடித்து வருவதால், தற்சமயம் மலையாள சீரியல்களில் நடிக்கவில்லை.

தமிழில் கயல் படத்தில் ஒரு சிறு கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அதே போல் மலையாலயாளத்திலும் பல படங்களில் நடித்துள்ளார்.

மேலும் செய்திகள்:15 வயசு சின்ன பொண்ணுக்கிட்ட இப்படியெல்லாமா பேசுவீங்க?... தாறுமாறாக விமர்சித்தவர்களை விளாசிய அனிகா...!

இந்நிலையில் இவர், டான் டாமி என்பவரை பெற்றோர் சம்மதத்துடன், கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின், சீரியல் நடிப்பதில் இருந்து விலகியே இருந்த இவர், மீண்டும் வாய்ப்புகள் தேடி வர, சீரியல்களில் நடிக்க துவங்கினார்.

இவர் சீரியல் நடிக்க துவங்கியதும், கணவன் - மனைவிக்குள் ஒரு சில கருத்து வேறுபாடுகள் துளிர் விட துவங்கியது. இதனால் கடந்த ஒரு வருடமாக இருவரும் தனித்தனியாக வசித்து வந்த நிலையில், தற்போது இருவரும் விவாகரத்து பெற்றுள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.