தல அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' படத்தில், அஜித்துக்கு மகளாக நடித்து பிரபலமானவர் குழந்தை நட்சத்திரம் அனிகா. இந்த படத்தை தொடர்ந்து, ஜெயம் ரவியுடன் மிருதன், அஜித்துடன், 'விஸ்வாசம்'  போன்ற படங்களில் நடித்து, கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகிவிட்டார்.

மேலும் இயக்குனர் எச்.வினோத், அஜித்தை வைத்து தற்போது எடுத்து முடித்துள்ள 'வலிமை' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

ஒரு பக்கம் திரையுலகில் பிஸியாக இருந்தாலும், மற்றொரு புறம் தன்னுடைய படிப்பிலும் முழு கவனம் செலுத்தி வருகிறார் அனிகா.

 மேலும் செய்திகள்: சென்னை பல்லாவரத்தில் பரபரப்பு..! சொந்த ஊருக்கு செல்ல போராட்டத்தில் குதித்த வடமாநில தொழிலாளர்கள்!
 

ஷூட்டிங் இல்லாத போது, விடுமுறை நாட்களில்... விதவிதமாக மாடர்ன் உடைகள் அணிந்து போட்டோ ஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

இவர் விதவிதமாக எடுக்கும் புகைப்படங்கள்  தான், இவர் கோவத்திற்கும் காரணம். 15 வயதில் இப்படியெல்லாம் புகைப்படம் ஏன், வெளியிடுகிறீர்கள் என அனிகாவை அன்பாக கேட்பவர்கள் ஒரு தரப்பினர் இருக்க, மற்றொரு தரப்பினர், இவரை கண்டமேனிக்கு விளாசிவருகிறார்கள். 

 மேலும் செய்திகள்: இளம் இயக்குனருக்கு பிறந்த இரட்டை குழந்தைகள்..! குவியும் வாழ்த்து!
 

இதனால் பொங்கி எழுந்துள்ளார் அனிகா. இது குறித்து அவர் கூறுகையில், " நான் 10 ஆம் வகுப்பு தான் படிக்கிறேன். இந்த வயதில் என்ன கிளாமர் இருக்கும் என தனக்கு புரியவில்லை. சாதாரணமாக போட்டோ ஷூட் எடுத்து பதிவிடுகிறேன். ஏன் என்னை இப்படி விமர்சிக்கிறீர்கள் என தெரியவில்லை. அதனால் தனக்கு சமூகவலைத்தளத்தில் வரும் கருத்துக்களை படிப்பதில்லை என விளாசியுள்ளார் அனிகா.