இளம் இயக்குனருக்கு பிறந்த இரட்டை குழந்தைகள்..! குவியும் வாழ்த்து!

பிரபல இளம் இயக்குனர், ரா.கார்த்திக் என்பவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதால், அவருக்கு பலர் தொடர்ந்து சமூக வலைதளத்தின் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
 

director karthick got twice baby

பிரபல இளம் இயக்குனர், ரா.கார்த்திக் என்பவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதால், அவருக்கு பலர் தொடர்ந்து சமூக வலைதளத்தின் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்தியாவில், நாளுக்கு நாள், கொரோனா வைரஸின் தாக்கம் ஒரு புறம் அதிகரித்து வந்தாலும், எதிர்ப்பாராத சில நல்ல செய்திகளும் வந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் இளம் இயக்குனர் ஒருவருக்கு, இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுக்கும் விதமாக இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது.

director karthick got twice baby

இயக்குனர் ரா.கார்த்திக்,  'வான்' என்கிற படத்தை இயக்கியுள்ளார். துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில், நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக, ஹீரோ படத்தில், நாயகியாக நடித்திருந்த இயக்குனர் ப்ரியதர்ஷனின் மகள், கல்யாணி நாயகியாக நடித்துள்ளார்.

'வான்' படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்து போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வந்த நிலையில், கொரோனா பிரச்சனையின் காரணமாக படத்தின் பணிகள் அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த படம்  கொரோனா பிரச்சனை முடிவுக்கு வந்ததும், படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என தெரிகிறது.

director karthick got twice baby

 அப்பா என்கிற புதிய பதவியை அடைந்துள்ள இளம் இயக்குனர்  ரா.கார்த்திக்கு ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளதாம்.  இந்த தகவல் தெரியவர, படக்குழுவினர் மட்டும் இன்றி இவருக்கு ரசிகர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios