24 சினிமா சார்ந்த தொழில் துறைகளில் திருநங்கைகளுக்கு வாய்ப்பு..! பெப்ஸி தலைவர் ஆர் கே செல்வமணி அறிவிப்பு!
சினிமா துறையில் சாதிக்க நினைக்கும், திருநங்கைகளுக்கு நிச்சயம் வாய்ப்பு வழங்கப்படும் என பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.
ஆரம்ப காலத்தில், ஆண்களுக்கே உரிதானகாக பார்க்கப்பட்ட திரைத்துறையில், நிறைய பெண்களும் துணிந்து இறங்கி சாதித்து வருகிறார்கள். குறிப்பாக சினிமாவில் இடம்பெற்றுள்ள 24 தொழில் துறையிலும் கால் பதித்துவிட்டனர். இந்நிலையில் பெப்ஸி தலைவர் ஆர் கே செல்வமணி, தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில், இயக்குனர்கள் எழுத்தாளர்கள் பாடலாசிரியர் என, 24 சினிமா சார்ந்த தொழில் துறைகளில் திருநங்கைகளுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது, தகுதி வாய்ந்த திருநங்கைகளுக்கு, அவர்கள் பணிபுரிய விரும்பும் அந்தந்த சினிமா சார்ந்த தொழில்துறை பிரிவுகளுக்கு ஏற்ப உறுப்பினர் அட்டையும் வழங்கப்படும் என்றும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தில் திருநங்கைகளும் உறுப்பினர்களாக இணைக்கப்பட்டுள்ளனர் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு திருநங்கைகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
சினிமா துறையில் சாதிக்க வேண்டும் என்கிற வெறியும், திறமையும் இருந்தும்... வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு இந்த அறிவிப்பு வரப்பிரசாதமாக அமைத்துள்ளது. எனவே இனி வரும் காலங்களில், திருநங்கைகளும் , இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள், பாடலாசிரியர், லைட் மேன், என பல்வேறு துறைகளில் கால் பதித்து, தங்களின் திறமையை வெளிப்படுத்துவார்கள் என்பது உறுதியாகியுள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D