'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படத்தில் ஐஸ்வர்யா ராய் கேரக்டரில் நடிக்க இருந்தது இவரா? 23 லீக்கான தகவல்!
இயக்குனர் ராஜூவ் மேனன் இயக்கத்தில் வெளியான 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படத்தில் ஐஸ்வர்யா ராய் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகை பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அஜித், மம்மூட்டி, அப்பாஸ், ஐஸ்வர்யா ராய், தபு, ஸ்ரீவித்யா, ஷாமிலி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடிப்பில் கடந்த 2000-ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 100 நாட்களுக்கு மேல் ஓடிய திரைப்படம் 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்'.
மாறுபட்ட காதல், செண்டிமெண்ட், எமோஷன்ஸ் போன்ற உணர்வு பூர்வமான கதைக்களத்தில் உருவான இந்த படத்தை இயக்குனர் ராஜூவ் மேனன் இயக்க, இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். குறிப்பாக இப்படத்தில் இடப்பெற்று, அனைத்து பாடல்களுமே தற்போது வரை, ரசிகர்களால் அதிகம் கேட்க கூடிய ஒன்றாக உள்ளது.
இந்த படத்தை வி கிரியேஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரித்திருந்தார். மேலும் இப்படம், சிறந்த படத்திற்கான தேசிய விருது, ஃபிலிம் ஃபேர் விருது போன்றவற்றை பெற்றது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இப்படம் வெளியாகி, 23 வருடங்கள் ஆகும் நிலையில், இப்படத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு பதில் நடிக்க இருந்த நடிகை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த படத்தில், ஐஸ்வர்யா ராய் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க கமிட் ஆனவர், மலையாள நடிகை மஞ்சு வாரியர் தானம். ஒரு சில காரணங்களால் இப்படத்தில் அவரால் நடிக்க முடியாமல் போக, அவர் கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார். இந்த தகவல் வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளது.