Veetla Vishesham : வீட்ல விசேஷம்... வலிமை வெற்றிக்கு பின் ‘குட் நியூஸ்’ சொன்ன போனி கபூர்
Veetla Vishesham : நேர்கொண்ட பார்வை, வலிமை என அடுத்தடுத்து ஹிட் படங்களை தயாரித்த போனி கபூர், அடுத்ததாக ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடித்துள்ள படத்தை தயாரித்துள்ளார்.
அஜித் மூலம் அறிமுகம்
பாலிவுட்டில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வரும் போனி கபூர், அஜித் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக அறிமுகமானார். பிங்க் என்கிற இந்தி படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகி இருந்த இப்படத்தை எச்.வினோத் இயக்கி இருந்தார்.
வலிமை தந்த வெற்றி
நேர்கொண்ட பார்வை படத்துக்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்ததால், அடுத்ததாக அஜித்துடன் மீண்டும் கூட்டணி அமைத்த போனி கபூர். அவர் நடித்த வலிமை படத்தை தயாரித்தார். அதிரடி ஆக்ஷன் படமாக தயாராகி இருந்த இப்படம் கடந்த மாதம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தியது.
பதாய் ஹோ ரீமேக்
இதையடுத்து போனி கபூர் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜியும், என்.ஜே.சரவணனும் இணைந்து ஒரு படத்தை இயக்கி வந்தனர். பாலிவுட்டில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற பதாய் ஹோ என்கிற இந்தி படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் தயாராகி உள்ளது. இதில் ஆர்.ஜே.பாலாஜி உடன் ஊர்வசி, சத்யராஜ், அபர்ணா பாலமுரளி ஆகியோரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
வீட்ல விசேஷம்
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில், அதன் பர்ஸ்ட் லுக் மற்றும் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி ‘வீட்ல விசேஷம்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படம் வருகிற ஜூன் மாதம் 17-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்... Malavika Hot : 42 வயதாகியும் கிளாமரை கைவிடல... பிகினி உடையில் கவர்ச்சி ததும்ப ஹாட் போஸ் கொடுத்த மாளவிகா