Malavika Hot : 42 வயதாகியும் கிளாமரை கைவிடல... பிகினி உடையில் கவர்ச்சி ததும்ப ஹாட் போஸ் கொடுத்த மாளவிகா
Malavika Hot : 42 வயதிலும் கிளாமர் குறையாமல் பிகினி உடையில் போஸ் கொடுத்து நடிகை மாளவிகா, வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் செம்ம வைரல் ஆகி வருகிறது.
சுந்தர்.சி இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த 1999-ம் ஆண்டு வெளியான 'உன்னைத் தேடி' படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் மாளவிகா.
இதைத்தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் ஆதிக்கம் செலுத்து வந்த மாளவிகா, முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார்.
இவர் ஹீரோயினாக மட்டுமின்றி பேரழகன், குருவி, சிங்கக்குட்டி போன்ற படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சி நடனம் ஆடி ரசிகர்களை பரவசப்படுத்தினார்.
பின்னர் பட வாய்ப்புகள சரிவர கிடைக்காததால் குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்த மாளவிகா, மிஷ்கினின் சித்திரம் பேசுதடி படத்தில் இடம்பெறும் வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் என்கிற பாடலில் ஆடியதன் மூலம் பட்டி தொட்டியெங்கும் பேமஸ் ஆனார்.
அதன் பிறகு கடந்த 2007 ம் ஆண்டு தொழிலதிபர் சுமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட மாளவிகா, அதன்பின் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டு இல்லற வாழ்க்கையில் கவனம் செலுத்து வந்தார். இவருக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.
தற்போது நடிகை மாளவிகாவுக்கு 42 வயதாகிறது. இன்றளவும் உடலை செம்ம பிட்டாக வைத்திருக்கும் அவர், தற்போது நீண்ட இடைவெளிக்கு பின் சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுத்துள்ளார்.
அந்த வகையில் மிர்ச்சி சிவா, ஜீவா இணைந்து நடித்துள்ள கோல்மால் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார் மாளவிகா. இப்படத்தை பொன் குமரன் இயக்கி உள்ளார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா, அதில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது நீச்சல் குளத்தில் குளித்தபோது எடுத்த புகைப்படங்கள் அவர் வெளியிட்டுள்ளார்.
42 வயதிலும் கிளாமர் குறையாமல் பிகினி உடையில் போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் செம்ம வைரல் ஆகி வருகிறது.
இதையும் படியுங்கள்... Thiruchitrambalam movie : தனுஷை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லுமா திருச்சிற்றம்பலம்? - லீக்கானது ரிலீஸ் தேதி